ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லையே பொதுமக்கள் வேதனை- லஞ்சம் கேட்கும் அதிகாரிகள்
தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய் தவெக அரசானது தனது ஐந்து ஆண்டுகால ஆட்சியையும் ஊழல் அற்ற வெளிப்படையான அரசியலாக இருக்கும் என தேர்தல் அறிக்கை என்பது அறிவித்தார், அவர் பொறுப்பேற்ற பிறகு பல புதிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன இருப்பினும் அறிவிப்பில்லாமல் மின்தடை குடிநீர் பிரச்சனை என வடுகடுக்காக வந்து கொண்டே இருக்கின்றன, அதுமட்டுமில்லாமல் இன்னுமுமே அரசு அதிகாரிகளே மக்களிடம் லஞ்சம் வாங்குவது மிக எளிதாக எப்பொழுதும் போல நடந்து கொண்டே இருக்கிறது, இதனால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்
ஒரு வாரத்தில் ஏழு பேர் லஞ்சம் வாங்கி இருக்கிறார்களா??
சுமார் ஒரு வாரத்திற்குள் மட்டும் தமிழ்நாட்டில் மொத்தம் ஏழு பேரை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்து அதிரடியான நடவடிக்கை எடுத்துள்ளது
- திருப்பூரில் சாலை மற்றும் வடிகால் பணிகளுக்காக இளநிலை பொறியாளர் சுப்பிரமணியன் ரூபாய் 5 லட்சம் லஞ்சம் வாங்கி லஞ்ச ஒழிப்புத்துறையினால் ஆதரத்துடன் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்
- தூத்துக்குடி மாவட்டத்தில் VAO சரவணன் பட்டா பெயர் மாறுதல் செய்வதற்காக 5000 ரூபாய் லஞ்சம் வாங்கி லஞ்சத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்
- இதே போல் தேனி மாவட்டத்தில் பட்டா பெயர் மாறுதல் செய்வதற்காக கார்த்தி என்பவர் லஞ்சம் வாங்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்
- திருவள்ளுவர் மாவட்டத்தில் நெல்லுக்கான கட்டண பட்டியலை தயார் செய்வதற்காக லஞ்சம் வசூலித்த சௌந்தர் பணம் வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார்
- மேலும் பட்ட பெயர் மாற்றம் செய்ய சர்வேயர் மீனாம்பிகை மற்றும் முகமது இப்ராஹிம் என்ற சர்வேயரும் லஞ்சம் வாங்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்
- திண்டுக்கல்லில் லாரி ஓட்டுனரிடம் FC புதுப்பிப்பதற்காக லஞ்சம் வாங்கிய மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முக ஆனந்த் கைது செய்யப்பட்டுள்ளார்
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் லஞ்சம் வாங்கியவர்களில் இருவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, தமிழக வெற்றி கழகத்தின் பல MLA க்கள் மற்றும் அமைச்சர்கள் ஆய்வில் ஈடுபடுகின்றனர், இருப்பினும் அதிகாரிகளின் இந்த லஞ்சம் வாங்கும் செயல்கள் ஒய்ந்த பாடே இல்லை என்பதே உண்மை, இது போன்ற செயல்களில் ஈடுபட்டு லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்றும்,நிரந்தர பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்ற கடுமையான தண்டனை கிடைக்கும் பட்சத்தில் ஊழல் அற்ற சமூகத்தை ஏற்படுத்தலாம்

