செய்திகள்தமிழகம்

மின்சாரத்துறை வரலாற்றிலேயே முதல் முறை -300 பேருக்கு உயர் பதிவு – மகிழ்ச்சியில் ஊழியர்கள்

எந்தவொரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் அதன் ஊழியர்களின் உழைப்பும் மனநிறைவும் மிக அவசியமாகும்.நீண்ட நாட்களாகப் பதவி உயர்வுக்காகக் காத்திருந்த உதவி செயற்பொறியாளர்களுக்கு, இந்த அறிவிப்பு ஒரு மிகப்பெரிய ஊக்க மருந்தாக ஒரே நேரத்தில் 300 பேருக்கும் பதவி உயர்வு தமிழ்நாடு அரசு அளித்துள்ளது . ஒரே தட்டலில் 300 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டிருப்பது, நீண்ட நாட்களாக,காத்திருந்தவர்களுக்கு கனவா! நினைவா? என்ற தருணமாக மாறி உள்ளது மின்சார வாரியத்தின் வரலாற்றில் இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

தமிழக அரசின் வெளிப்படை தன்மை மற்றும் நேர்மையான நிர்வாகம்

ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் தவெக அரசானது, மின்வாரிய துறையின் பதவி உயர்வு என மிகவும் வெளிப்படை தன்மையாகவும்,நேர்மையான முறையிலும், ஒரு ரூபாய் கூட செலவு இல்லாத வகையிலும் குறிப்பாக ஊழியர்களின் பணி இடமாற்றம் மற்றும் முறைகேடுகள் எதுவும் இல்லாமல் தமிழக அரசு ஆனது தகுதியுள்ள எந்தவொரு அதிகாரியின் பெயரும் விடுபடாத வகையிலும், தகுதியற்றவர்களுக்கு முன்னுரிமை கிடைக்காத வகையிலும்உதவி செயற்பொறியாளர் (Assistant Executive Engineer) நிலையிலிருந்து செயற்பொறியாளராக (Executive Engineer) பதவி உயர்வு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

மின்வாரியத்துறையில் வரலாற்றுச் சாதனை படைத்த முதலமைச்சர் ஜோசப் விஜய்

பொதுவாக, அரசுத் துறைகளில் பதவி உயர்வுகள் என்பது பல்வேறு கட்டப் பரிசீலனைகள் மற்றும் தாமதங்களுக்குப் பிறகே நிகழும். ஆனால், தற்போதைய நிர்வாகம் ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், பொதுமக்களுக்கான மின் சேவையை மேலும் வலுப்படுத்தவும் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.

தகுதி மற்றும் பணிமூப்பு சீனியாரிட்டி (Seniority) ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே இந்தத் தேர்வுகள் மிகத் துல்லியமாக நடத்தப்பட்டுள்ளன இது ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் உடனே நிறைவேற்றி வைக்கும் படும்பொழுது, அவர்களின் உற்சாகத்தை அதிகரிப்பதோடு நேர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்பதை எதிர்பார்க்கப்படுகிறது

நிர்வாக மேம்பாடு

முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்த 300 பேருக்கான உயர் பதவியினால் பல ஆண்டுகளாக தேக்க நிலையில் உள்ள களப்பணிகள் மற்றும் அப்புறம் அரிப்பு பணிகள் விரைவு படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

தமிழக மின் வாரியத்தில், தொழில்நுட்பம், கணக்கு, தணிக்கை, நிர்வாகம், செயலக பிரிவுகளில் பல்வேறு பதவிகளில் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். மொத்தம், 1.42 லட்சம் பணியிடங்களில் தற்போது, 80,000 பேர் பணிபுரி கின்றனர்.மாநிலம் முழுதும் நேற்று ஒரே நாளில் மட்டும், 876 பேர் ஓய்வு பெற்றுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *