ஆன்மிகம்ஆலோசனைசெய்திகள்தமிழகம்

அசைபோடும் ஆன்மிக நிகழ்வுகள் ஒரு பார்வை

2020ஆம் ஆண்டு ஒரு மறக்க முடியாத பல நிகழ்வுகளை சமாளித்த போதிலும், சில முக்கியமான நிகழ்வுகள் என்னென்ன இந்த ஆண்டு நிகழ்ந்தன என்பதைப் பார்க்கலாம்.

மேலும் படிக்க : பாபாவின் அருள் ஆசியுடன் பஞ்சாங்கமும் ராசிபலனும்

  • சீரடி சாய்பாபா குடமுழுக்கு விழா ஜனவரி 20ஆம் தேதி நடைபெற்றது. இடம் சமயபுரம் அருகே அக்கரைப்பட்டி – திருச்சி மாவட்டம்
  • தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட தைப்பூச ஜோதி தரிசன விழா. வடலூர் சத்திய ஞான சபை – கடலூர் மாவட்டம்
  • தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவுக்கு பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கோலாகல கொண்டாட்டத்துடன் மகா சிவராத்திரி நன்னாளில் சிவாலய ஓட்டம் ஆனது நடைபெற்றன-கன்னியாகுமரி மாவட்டம்.
  • புதுச்சேரியில் வைத்திக்குப்பம் கடற்கரை மாசி மகம் கடல் தீர்த்தவாரி நிகழ்ச்சி. 100க்கும் மேற்பட்ட உற்சவ மூர்த்திகளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றன.
  • கும்பகோணத்தில் உள்ள சங்கரபாணி கோவில் பாஸ்கர ஷேத்ரம் எனப்படும் இக்கோவிலுக்கு காணிக்கையாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பகவத் கைங்கரியம் அறக்கட்டளை சார்பில் அரை கிலோ எடையில் தங்கத்தாலான திருவடியை செலுத்தியது.
  • யூடியூப் மூலமாக பக்தர்கள் தரிசனம் செய்ய திருநள்ளாறு சனி பகவானுக்கு நடைபெற்ற அபிஷேக ஆராதனைகளை கண்டு களிக்க நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தன. புதுச்சேரி – காரைக்கால் மாவட்டம்.
  • அக்டோபர் 18ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி பெருவிழா முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி ஸ்ரீ ரங்கநாதர் ஸ்வாமி கோவிலில் நடைபெற்றன திருச்சி மாவட்டம்
  • அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரையை சீரமைக்கும் பணி நவம்பர் மாதம் 15ஆம் தேதி தொடங்கியது திருவண்ணாமலை மாவட்டம்
  • ஆருத்ரா தரிசன விழாவிற்கான கொடியேற்ற நிகழ்ச்சி மார்கழிமாதம் டிசம்பர் 21ஆம் தேதி சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெற்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *