1 மாதத்திற்குள் மிகப் பெரிய சாதனை படைத்த முதலமைச்சர் விஜய்!!- 8200 பேருக்கு வேலைவாய்ப்பு தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தமிட்டது L&T நிறுவனம்
முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய தவெக அரசு பொறுப்பேற்ற வெறும் 25 நாட்களிலேயே, மாற்றத்தின் அடிக்கள்ளாக தொழில் துறையில் பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது,பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் தொழில்துறையில் சுமார் 18,600 கோடி ரூபாய் மதிப்பிலான மெகா புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் (MoU) கையெழுத்திட்டு அசத்தியுள்ளது.

L&T நிறுவனம் சிறப்பு
L&T நிறுவனமானது , உலகின் டாப் ஒப்பந்ததாரர்களில் ஒன்றாகத் திகழ்கிறது. நாட்டின் முக்கிய பாலங்கள், விமான நிலையங்கள், மெட்ரோ ரயில்கள் மற்றும் பிரம்மாண்டமான திட்டங்கள் பலவற்றை உருவாக்கியுள்ளது
50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கும் இந்நிறுவனம், பன்னாட்டு செயல்பாடாக 52 தேசிய இனங்களைச் சேர்ந்த பணியாளர்களைக் கொண்டு சிறந்து விளங்குகிறது.
தற்போது இந்த நிறுவனம் ஜூன் 6 முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா முன்னிலையில் தமிழ்நாடு அரசுடன் சார் 18,000 கோடி முதலீடு செய்ய லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் மூன்று திட்டங்களில் ஒப்பந்ததில் கையொப்பமிட்டுள்ளது
மூன்று திட்டங்களில் ஒப்பந்தம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில்ரூ.15,000 கோடி மதிப்பீட்டில் தகவல் தரவு மைய விரிவாக்கத்தின் மூலம் (Data Centre) 500 பேருக்கு வேலை வாய்ப்பு .
கோயம்புத்தூர் மாவட்டத்தில் ரூ.2,500 கோடி முதலீட்டில் மின்னணு மற்றும் மென்பொருள் உற்பத்தித் திட்டம் 2000 பேருக்கு வேலை வாய்ப்பு
திருவள்ளூர் காட்டுப்பள்ளி மாவட்டத்தில் ரூ.1,100 கோடியில் L&T நிறுவனத்தால் கடலோர காற்றாலை கட்டமைப்பு கப்பல் கட்டும் தளம் விரிவாக்கம் மூலம் 5500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவிருக்கிறது
தமிழக முதலமைச்சரின் இலக்கு இதுவே
2036-ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தின் பொருளாதாரத்தை 1.5 ட்ரில்லியன் டாலராக உயர்த்த வேண்டும் என்ற தமிழக முதலமைச்சரின் இலக்கிற்கு இம்முதலீடுகள் ஒரு முக்கிய மைல்கல்லாகவும் ஆரம்ப புள்ளியாகவும் அமையும்
இத்திட்டங்கள் முழுமையாகச் செயல்படுத்தப்படும் போது, தமிழக இளைஞர்களுக்குப் பெருமளவிலான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, மாநிலப் பொருளாதாரம் வலுவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

