electionசெய்திகள்தமிழகம்தேசியம்விழிப்புணர்வு

மது இல்லாத தமிழகம் உருவாக வேண்டும் – 717 மதுபானங்கள் கடை மூட உத்தரவிட்டது விஜயின் அரசு – மேலும் ஒரு சிக்கலில் மக்கள்

முதலமைச்சர் பதவி ஏற்ற உடனே போதை பொருள் சம்பந்தம்பட்ட குற்றங்களை தடுக்க தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கையெழுத்திட்டார் அந்த வகையில் தமிழகம் மது இல்லாத நாடக உருவாக்க வேண்டும் என்பதின் நோக்கமாக முதற்க்கட்டமாக வேலை தொடங்க பட்டுள்ளது அவருடைய இந்த செயலுக்கு பல அரசியல் தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்

போதை பொருள் இல்லா தமிழகத்தின் அடிக்கல்

தமிழ்நாட்டில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்படும் 717 மதுபான கடைகளை (டாஸ்மார்க்) இரண்டு வாரத்திற்குள் மூட உத்தரவிட்டுள்ள தமிழக முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் உத்தரவிட்டதை தொடர்ந்து அதற்கென்று தனிப்படை அமைத்து அதிகாரிகளை அமைத்துள்ளனர் அதிகாரிகளும் ஆர்வம் காட்டி வந்து காட்டி வருகின்றனர்

தமிழகத்தில் உள்ள டாஸ்மார்க் நிறுவனங்கள் மூலம் நடத்தப்படுகின்ற மதுபான கடைகளில், வழிபாட்டு தலங்கள் அருகில் 276 மது கடைகளும், கல்வி நிறுவனங்கள் அருகில் 186 மது கடைகளும், பேருந்து நிலையம் அருகில் 255 மதுபான கடைகளும் சேர்த்து மொத்தம் 717 மதுபான கடைகளை இரண்டு வார காலங்களில் மூடப்பட வேண்டும்என்று உத்தரவிட்டுள்ளார்

அமலாக்க நடவடிக்கை

முதலமைச்சரின் இந்த உத்தரவு படி, இரண்டு வாரங்களுக்குள் வழிபாட்டு தளங்கள், பள்ளி கல்லூரிகள்,பேருந்து நிலையங்கள் அருகில் 500 மீட்டர் சுற்றளவில் உள்ள 717 மதுபான கடைகள் மூடப்பட வேண்டும்

தமிழகத்தில் உள்ள மதுபான கடை முழு விவரம்

தமிழகத்தில் உள்ள மது பான கடைகள் மொத்தம் 4765 டாஸ்மாக்குகள் உள்ளன, தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் அறிக்கைப்படி, “ போதைப்பொருள் இல்லாத தமிழகம் “ என்ற இலக்கிற்கான முதற்படியாக பார்க்கப்படுகிறது, மேலும் சில விதியை மீறிய மதுப்பான கடைகளும் உள்ளன

மாவட்ட வாரியாக ஆய்வு நடத்தும் அதிகாரிகள்

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக,விதி மீறி செயல்படும் மதுபான கடைகளை அதிகாரிகள் ஆய்வு செய்துகொண்டு வருகின்றனர், ஈரோடு, கோவை மாவட்டங்களில் இந்த கள ஆய்வு முழுமையாக நிறைவடைந்துள்ளன, மேலும் கோவை மாவட்டத்தில் மட்டும் 60 மதுபான கடைகள் மூடப்படும் என்று தெரிவிக்க பட்டுள்ளனர்

Credits – google

புதிய சிக்கல் -மூடப்படும் கடைகளில் பணியாற்றியவர்களின் நிலை

மூடப்படும் கடைகளில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு மாற்றுப்பணிக்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் டாஸ்மாக் அதிகாரிகள் இன்றிலிருந்தே டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது ஊழியர்களிடையே வேலை குறித்தான பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு கடையிலும் சூப்பர்வைசர் மற்றும் 2 சேல்ஸ்மேன்கள் உட்பட குறைந்தது 5 பணியாளர்கள் வேலை செய்கின்றனர். 717 கடைகள் என்றால் கிட்டத்தட்ட 3,585 பணியாளர்களை வேறு கடைகளுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்த படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *