Jallikattu bullsசினிமாசின்னத்திரை

ஜெயிலுக்கு போகும் மனோஜ் – ரோகினிக்கு நல்ல வாய்ப்பு கெடச்சுருக்கே!! விஜயாவிற்கு ஆப்பு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று மனோஜை பினான்சியர் மூலம் கம்பளைண்ட் கொடுக்க வைத்து ஜெயிலுக்கு அனுப்புகிறார் சிந்தாமணி, மனோஜ் ஜெயிலுக்கு போனதால் குடும்ப மானமே போகிறது என்ற மன வருத்தத்தில் அண்ணாமலை, ரோகினியிடம் நல்லவல் போல் வேஷம் போடும் சிந்தாமணி, எப்படியாவது மனோஜை ஜெயிலுக்கு அனுப்பி வெச்சுட்டா எப்படி இந்த சிக்கல்ல இருந்து மனோஜ் காப்பாத்தலாம் அப்படி தான் யோசிப்பாங்க, எப்படி 3 மாசத்துக்குள்ள கடன் அடைக்கிறாங்குனு இந்த மாதிரி பிரச்னை கொடுத்து சிக்கல் கொடுக்கிறாங்க சிந்தாமணி

Source – google

மனோஜை கைது செய்யும் போலீஸ்

சிந்தாமணி சொன்னபடியே பைனான்சியரும் மனோஜ் மீது கம்பளைண்ட் கொடுத்து விடுகிறார், இங்க முத்துவும் மீனாவும் அப்போது தான் 48 லட்சத்தில், மீனா தாலியை வித்து, பாட்டி கொடுத்த நகையெல்லாம் வித்து 10 லட்சம் கடன் அடைத்து விட்டோம் என சந்தோசமாக சொல்லி கொண்டு இருக்கிறார்கள், முத்து சொன்னதும் அண்ணாமலைக்கும் வீடு கைவிட்டு போகாதென்று ஒரு தைரியம் கிடைத்தது, அந்த சந்தோசம் 5 நிமிடம் கூட நிலைக்கவில்லை, மனோஜை தேடி வீட்டிற்குள் போலீஸ் வந்துவிட்டார்கள், எவ்வளவு சொல்லியும் கேட்காமல், மனோஜை அர்ரெஸ்ட் செய்றாங்க போலீஸ்

அண்ணாமலையின் கோபம்

வீட்டிற்கு போலீஸ் வந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் குடும்பத்தையே தப்பாக பேச, மனோஜை இப்படி செல்லம் கொடுத்து குற்றவாளி ஆக்கிட்டாலேனு விஜயா மேல அண்ணாமலைக்கு கோபம் தான் வருது, முத்துவுக்கும் மீனாவுக்கும், ஒரு பக்கம் இன்னும் மூணு மாசத்துல 48 லட்சம் பணம் கொடுக்கணும், இன்னோரு பக்கம் மனோஜை ஜெயில்ல இருந்து வெளியே எடுக்கணும், முத்துவுக்கும் மீனாவுக்கும் மனோஜால நிம்மதி இல்லாம போயிடுச்சு, திரும்ப அவங்களும் லாயர் கூட்டிட்டு போயி ஜாமீன் எடுக்க முடியுமான்னு முயற்சி எடுத்துட்டு இருக்காங்க, ஆனால் லாயர் வந்து பேசினாலும் மனோஜ் இப்போதைக்கு வெளியே எடுக்க முடியாதுனு கை விரிச்சுட்டாங்க

Credit – google

ரோகினியிடம் சிந்தாமணி கொடுக்கும் ஐடியா

ரோகினியோ சிந்தாமணி உண்மை முகம் தெரியாம, மனோஜ் அர்ரெஸ்ட் பண்ணீட்டாங்கன்னு சொல்லி அழுக, நல்லது பண்றமாரி சிந்தாமணி சித்து விளையாட்டு விளையாட ஆரம்பிச்சுட்டாங்க,” நீ எப்படியாவது மனோஜை ஜெயில்ல இருந்து வெளியே காப்பாத்திட்டு வா, இந்த மாறி கஷ்டமான நேரத்துல நீ போய் நின்னாதான் உன் புருஷன் உனக்கு கெடப்பான்னு சொல்லி உசுப்பேத்திகிட்டு இருக்காங்க, எப்படியோ விஜயா வீட்டை ஆட்டைய போட சிந்தாமணி பக்கவா பிளான் போட்டுட்டு வராங்க, இனி அடுத்து மனோஜை காப்பாற்ற போவது ரோகினியா?? இல்ல முத்து மீனவா பொறுத்திருந்து பாக்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *