செய்திகள்தமிழகம்தேசியம்

ஈரான் அமெரிக்க போர் ஆட்டம் காணும் கோவை திருப்பூர்

ஈரான் அமெரிக்க போர் ஆட்டம் காணும் கோவை திருப்பூர்

ஈரான் அமெரிக்கா இடையேயான வான்வழி தாக்குதல் உலகெங்கும் பெரும் அதிர்ச்சியை மற்றும் ஆழ்ந்த அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஈரான் அமெரிக்கா இடையே நடைபெற்று வரும் தாக்குதலால் ஆண்கள் பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் பலியாக இருக்கின்றனர்.

ஈரான் மீது அமெரிக்க தாக்குதல்

ஈரானின் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி மற்றும் அவருடைய குடும்பத்தினர் தலைவர்கள் புரட்சிகர காவல் படை தளபதி பாதுகாப்புத்துறை அமைச்சர் அமீர் நசீர் ஆகியோர் ஈரானில் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் இந்த முறையற்ற செய்யலாம் ஈரான் கொந்தளித்து அமெரிக்காவுக்கு ஆதரவாக இருக்கும் வளைகுடா நாடுகளின் மீது அமெரிக்க நிலைக்கலன்களில் தாக்குதலை நடத்தியுள்ளது. கோபத்தில் கொந்தளித்த அமெரிக்கா ஈரான் இடையே கடும் தாக்குதல் மோதல் நடந்து வருகின்றது சர்வதேச அளவில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் அமெரிக்கா இஸ்ரேல் தொடர் தாக்குதல்

ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றது ஈரானும் பதிலுக்கு தாக்குதல் அடி கொடுத்து வருகின்றது கடந்த சில நாட்களாக ஈரானுக்கு பெரும் சேதத்தை அமெரிக்கா தனது தாக்குதலால் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. ஈரான் அடிபணிய வேண்டும் என அமெரிக்கா எதிர்பார்க்கின்றது ஆனால் ஈரான் பதிலடி கொடுத்து கோபத்தின் உச்சியில் இருக்கின்றது இதனால் வளைகுடா முழுவதும் எப்போது என்ன நடக்குமோ என்ற ஒருவித பரபரப்பும் அச்ச சூழலில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

ஈரான் எச்சரிக்கை என்ன செய்யும் அமெரிக்காவை

ஈரானின் பாதுகாப்புத் தலைவர் அலி லாரி ஜானி அமெரிக்காவை கடுமையாக எச்சரித்து ஈரானை யாராலும் ஒழிக்க முடியாது என்று பதில் அளித்து இருக்கின்றார் உங்களை ஒழிக்கலாம் என்றும் டிரம்ப்பை எச்சரித்து இருக்கின்றார்.

11 நாள் ஈரான் அமெரிக்கா இஸ்ரேல் போர்

தொடர்ந்து 11வது நாளாக ஈரான் அமெரிக்கா இஸ்ரேல் போர் மிகப்பெரிய அளவில் நடந்து கொண்டிருக்கின்றது மரண ஓலங்கள் ஆங்காங்கே கேட்ட வண்ணம் இருக்கின்றன சுற்றி இருக்கும் வளைகுடா நாடுகள் தங்களது நோன்பு நேரத்தில் கேட்கக்கூடாத தகவலை கேட்டுக் கொண்டிருக்கின்றனர். எந்த நாட்டை அடுத்தது என்ன செய்யலாம் என்று யோசிப்பார்களோ என ஒவ்வொரு நாளும் தங்களது பாதுகாப்பு செயல்பாடுகளை பரிசோதித்து கொண்டே இருக்கின்றன.

ஈரான் கடும் கோபத்தில் அமெரிக்காவை எதிர்த்து பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கின்றது. ஈரானின் பாதுகாப்பு தலைவர் அமெரிக்க ட்ரம்பை எச்சரிக்கின்றார். இந்த நேரத்தில் ஈரான் நாட்டின் தலைவராக மொஜ்தபா கமேனி தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றார். ஈரானுக்கு எந்த தலைவர் வந்தாலும் அவரையும் சுக்கு நூறாக ஒழிப்போம் என்று ஒரு பக்கம் அமெரிக்கா கொக்கரித்துக் கொண்டிருக்கின்றது. ஈரான் எந்த நடவடிக்கை எடுத்தாலும் அது அமெரிக்காவின் கண் இசைவில் இருக்க வேண்டும் என்று அமெரிக்கா ஆசைப்படுகின்றது . ஆனால் நீ யார் என்னை செயல்பட அனுமதிக்க என்று ஈரான் முறைப்பு ஒரு பக்கம் ஏண்டா அடித்துக் கொள்கிறீர்கள் என கதறும் நாடுகள் மறுபக்கம்.

அமெரிக்கா ஈரான் போரினால் பாதிக்கப்பட்ட கொங்கு பெல்ட்

அமெரிக்கா ஈரான் இஸ்ரேல் போரின் காரணமாக ஈரான் தனது கடல் வழி ஹார்முஸ் நீரிணை மூடி நிறுத்தி இருக்கின்றது. இதன் மூலமாக என்னை விநியோகத்தில் கச்சா எண்ணெய் கப்பல்கள் அதிக அளவில் சென்று வருவது வழக்கம். தற்போதைய சூழலில் நீரிணை மூடியிருப்பதால் பெரும் பாதிப்பு இந்தியா உட்பட உலக நாடுகள் சந்தித்து வருகின்றனர். இப்போது என்னால் உலக நாடுகள் வணிகம் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் அதிக வருவாயை ஈட்டி தரும் கொங்கு பெல்ட் பகுதிகளான கோவை திருப்பூர் ஈரோடு கரூர் போன்ற கொங்கு பகுதிகளில் ஜவுளி மற்றும் மோட்டார், கிரைண்டர் ஏற்றுமதிகள் பாதிப்பு அடைந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மறு உற்பத்தி தொடங்குவதற்கான சிக்கலும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சரியாக கொண்டு போய் சேர்த்து விற்பனை செய்வதற்கான சாதக சூழலும் இல்லாததால் ஈரான் அமெரிக்கா போர் கொங்கு மண்டலத்தை வணிக ரீதியில் பாதிக்க வைத்து இருக்கின்றது. கப்பல் ஓடாததால் ஜவுளி, வெட் கிரைண்டர்கள், மற்ற தேவையான பொருட்கள் ஏற்றுமதியானது நிறுத்தப்பட்டுள்ளது. எப்ப இவனுங்க போற நிறுத்தி நாம எப்போ வியாபாரம் பண்றது என்ற கலக்கத்தில் கொங்கு மண்டல பின்னலாடை துறை மற்றும் மோட்டார் உற்பத்தி துறை க்ஷ்தம்பித்து நிற்கின்றது. வெகு விரைவில் போரானது முடிவுக்கு வரவேண்டும் உலகம் அமைதியில் திளைக்க வேண்டும் வியாபாரம் வர்த்தகம் தொழில் முன்னேற்றம் வேலை வாய்ப்பு சம்பாத்தியம் குடும்பம் ஒற்றுமை தேவைகள் நிறைவேற்றல் என நிம்மதியுடன் உலகம் அமைதியாக வாழ வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *