விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சர் ஜோசப் விஜய்
ஜோசப் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அரசியலில் புதிய மாற்றத்தை கொண்டு வந்து கொண்டிருக்கிறார், அந்த வகையில் விவசாயிகளின் கோரிக்கைக்கு அனுமதி அளித்துள்ளது விவசாயிகளுக்கு பொதுமக்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது, நீர் நிலைகளில் இருந்து வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி அளித்துள்ளது,வண்டல் மண்ணை விலையில்லாமலும் உரிமக்கட்டணம் செலுத்தாமலும் எடுத்துச் செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
விவசாயிகளின் கோரிக்கை
தமிழ்நாட்டில் தொடர்ந்து செயற்கை உரங்கள் பயன்படுத்தி கொண்டே வருவதால் வறட்சி ஏற்பட அதிகமாக வாய்ப்புள்ளது இதனால் ஏரி மற்றும் குளங்களின் அடியில் படிந்திருக்கும் வண்டல் மண்ணானது அதிக சத்துக்களை கொண்டுள்ளது
இதனை மண்ணிற்கு பயன்படுத்தம்போது மண்ணின் வளமும் மேம்படும், செயற்கை உரத்தேவை குறைந்துவிடும், மேலும் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாத நீர் நிலைகளில் இருந்து வண்டல் மண் எடுப்பதன் மூலம், அந்த நீர் நிலையானது ஆழப் படுத்தப்பட்டு மழை நீர் சேமிக்கும் இடமாகவும், அதை சுற்றியுள்ள பகுதியில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் உதவும்
எனவே விவசாயிகள் தங்கள் சொந்த கிராமத்திலையோ அல்லது தாலுகாவுக்கு உட்பட்டு உள்ள பகுதிகளில் இருந்து வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது
source credit -google

ஆய்வுக் கூட்டத்தின் முடிவுகள் விவசாயிகளுக்கு சாதகமானது
நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல அனுமதி அளிப்பது குறித்த ஆய்வு முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்று, இதில் நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாயிகள், மட்பாண்டத் தொழிலாளர்கள் மற்றும் தனிநபர்களின் வீட்டு உபயோகங்களுக்கு விலையில்லாமல் வழங்குவதற்கும், இதன்மூலம் நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிப்பதற்கும் வழிவகை ஏற்படும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த வண்டல் மண்ணானது இலவசமாக கிடைப்பதால் மண்ணிற்கு தேவையான செயற்கை உரங்கள் மற்றும் மேம்பாட்டு விலை உயர்வை சற்று தவிர்க்கலாம் என்பதே விவசாயிகளின் நோக்கமாக கருத படுகிறது, மேலும் பருவ கால மழைக்கு முன்பே இந்த மட்டன் பண்ணி எடுப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும், அப்போதுதான் பருவ கால மழையின் போது நீரையும் சேமிக்க முடியும் என்பது எதிர்பார்ப்பு
இதன் விதிமுறைகள் என்ன?
மாவட்ட ஆட்சியருக்கு தங்கள் மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் குளங்களின் பட்டியலை மாவட்ட அரசிதலில் வாயிலாக வெளியிடுவார்கள், உங்கள் பகுதியுள்ள நீர்நிலைகள் அதன் இடம்பெற்று இருக்கிறதா என்பதை கவனித்துக் கொள்ள வேண்டும்
வண்டல் மண் ஆனது தமிழக அரசு சார்பில் இலவசமாக தரப்படும் ஆனால் மண்ணை எடுப்பதற்கான இதர செலவை விண்ணப்பதாரர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்
வண்டல் மண்ணை விலையில்லாமலும் உரிமக்கட்டணம் செலுத்தாமலும் எடுத்துச் செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதற்காக, https://tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிந்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த 10 நாட்களுக்குள் தொடர்புடைய வட்டாட்சியர்களால் அனுமதி வழங்கப்படும்.

