மனோஜை காப்பாற்றும் ரோகினி இனி மனோஜிற்கு ரோகினி முக்கியமா?? இல்ல விஜயா முக்கியமா??
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் நேற்று மனோஜ் போலீசால் கைது செய்யப்பட்டிருக்கிறார் அதுவும் போர்சரி கேசில் இப்போது மனோஜை ரோகிணி காப்பாத்த போறாங்களா இல்ல முத்துவும் மீனாவும் காப்பாற்ற போறாங்க அப்படிங்கறது தான் ரொம்பவுமே விறுவிறுப்பாக கொண்டு போய் இருக்காங்க, இதுல நம்ம சிந்தாமணியோட சித்து விளையாட்டு வேற ரொம்பவுமே அற்புதமா இருக்கு என்ன நடந்தது பாக்கலாம்
ரோகினி இடம் டிமாண்ட் பண்ணும் பைனான்சியர்
ஒரு பக்கம் என் புருஷன்தான் தயவு செய்து விட்டுருங்க நான் வேணா கையெழுத்து போட்டு தரேன் கண்டிப்பா அவரு நாற்பத்தி எட்டு லட்சத்தையும் கொடுத்திடுவார் என்று சொல்லி surety கொடுத்துட்டு இருக்காங்க ரோகிணி, எனக்கு surety எல்லாம் தேவை இல்லை உங்க ஹஸ்பண்டா இப்ப வெளிய விடணும் அப்படின்னா உங்க மேல நம்பிக்கை வரணும் அப்படின்னா, உடனடியா எனக்கு பத்து லட்சத்தை கொண்டு வந்து கொடுங்க அதுக்கப்புறம் மனோஜ் இந்த கேஸ்ல இருந்து வெளியே விட்டு விடுகிறேனு சிந்தாமணியும் பினான்சியும் பேசி வச்சுக்கிட்டு இந்த மாதிரி ரோகினிக்கு தெரியாமையே வந்து ரோகினி பணத்தை ஆட்டைய போட பாக்குறாங்க
ரோகினிக்கு உதவும் கிருஷ் உறவினர்
பினான்சியர் சொன்ன உடனே ரோகிணிக்கு என்ன பண்றதுன்னு தெரியல ஓடிப்போய் நான் கிறிஸ்டியோட சொந்தக்காரங்க கிட்ட தான் நிக்கிறாங்க உங்க சொத்த தேவை இல்லைன்னு சொன்னேன் ஆனா இப்போதைக்கு என் புருஷன காப்பாத்தறதுக்கு உங்களை விட்டால் வேற யாருமே இல்ல எப்படியாவது பத்து லட்சம் பணத்தை கொடுத்து என் புருஷன வெளியே எடுக்கிறதுக்கு உதவி பண்ணுங்கன்னு சொல்லி அங்க அழுதுட்டு நின்னுட்டு இருக்காங்க, அவங்களுமே சத்துக் கொடுப்பதற்காக தான் ரோகிணியை தேடி வந்தாங்க சொத்து வேணாம்னு ரோகினி சொல்லிட்டாங்க இருந்தாலும் எந்த மாதிரி நேரத்துல ஹெல்ப் பண்ணலாம்னு சொல்லிட்டு அவங்களும் 10 லட்சம் எங்களால முடியாது. ஐந்து லட்சம் கொடுக்கிறோம்னு கொடுத்துட்டாங்க
விஜயாவின் மனநிலை
எங்க வீட்டுல விஜயாவும் அண்ணாமலையும் ரொம்பவுமே மன கஷ்டத்துல இருக்காங்க மனோஜ் உரத்தினால் தான் எப்பவுமே நமக்கு இந்த மாதிரி கெட்ட பேர் வந்துகிட்டே இருக்குன்னு நம்ம அண்ணாமலையும் வருத்தமா இருக்காரு, மீனாவும் முத்துவும் உள்ள போனவுடனே மனோஜை ஏன் கூட்டிட்டு வரலன்னு தான் நம்ம விஜயா முதல் கேள்வி கேக்குறாங்க அவனை கூட்டிட்டு வர்றதுக்காக தான் நாங்க இன்னொரு வேலைய பண்ணிட்டு இருக்கோம் சிந்தாமணி நிறைய பேருக்கு பணம் வட்டிக்கு கொடுக்கிறேன் என்று சொல்லி கந்துவட்டிக்கு மேல பணம் வாங்கி நிறைய பேரை ஏமாத்தி இருக்கா இப்போ அவங்க கிட்ட எல்லாம் பேசி அவ மேல கம்ப்ளைன்ட் கொடுத்தாங்க அப்படின்னா மனோஜ் வெளிய வந்துருவான்னு சொல்லி ஒரு பக்கம் மீனாவும் முத்துவும் மனோஜ் காப்பாத்துறதுக்காக ரொம்ப முயற்சியில ஈடுபட்டு இருக்காங்க
சிந்தாமணியின் திருட்டுத்தனம்
சிந்தாமணி பூ வியாபாரம் பண்றது மட்டும் இல்லாம, வட்டிக்கு கடன் விட்டு சம்பாதிச்சுக்கிட்டு இருக்காங்கனு தெரியும், உங்களை சிந்தாமணி அதிக வட்டி வாங்கிட்டு ஏமாத்துறாங்கன்னு தெரியும் பூ வியாபாரி சங்க தலைவியா கேக்குற அவங்களுக்கு எதிரா கம்பளைண்ட் கொடுங்கன்னு முத்துவும் மீனாவும், சிந்தாமணியிடம் ஏமாந்துவங்க கிட்ட கேட்டுகிட்டு இருக்காங்க, அவங்களும் கம்பளைண்ட் எழுதி கொடுத்துட்டாங்க, இந்த விசயம் தெரிஞ்சு, சிந்தாமணி அடியாள் சிந்தாமணிக்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்காங்க, வேற வழியே இல்ல வாபஸ் வாங்கிடலாமுன்னு

credits – Google
டபுள் கேம் விளையாடும் சிந்தாமணி
அந்த நேரத்துல ரோகினி ஓடி போய் நான் அஞ்சு லட்சம் ரெடி பண்ணிட்டேன் எப்படியாவது பைனான்சியர் கிட்ட பேசி மனோஜ இந்த கேஸ்ல இருந்து வெளியே கொண்டு வாங்கன்னு ரோகினிக்கு போய் சிந்தாமணியிடம் கெஞ்சிகிட்டு இருக்காங்க, அவங்களும் வந்த வரைக்கும் லாபம் இந்த 5 லட்சத்தை வாங்கிட்டு மனோஜ் மேல கேஸ் கொடுத்ததை வாபஸ் வாங்கிருங்க பைனான்ஸ் என்கிட்ட சொல்லிட்டாங்க ஆனா கண்டிப்பா அழுத்தமா ரோகிணி தான், மனோஜ் காப்பாத்துறதுக்கு காரணமா இருந்தாங்கன்னு எல்லாரும் முன்னாடியும் சொல்லிடுங்கன்னு சொல்லிட்டாங்க, இனிமேதான் டுஸ்டே காத்துகிட்டு இருக்கு, மனோஜை ரோகினி தான் ஜெயில இருந்து வெளிய எடுத்து இருக்காங்க,மனோஜ்க்கு ரோகினி மேல இருக்கிற கோபம் எல்லாம் போயிடுச்சு, காதல் மலர்ந்திருச்சு, இனி அடுத்து மனோஜ் ரோகினி கூட இருக்க போறாங்களா இல்ல அம்மா தான் முக்கியம்னு விஜயா கிட்ட வர போறாங்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்

