திருவள்ளூர் மாவட்டத்தில் இறால் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா வாயு கசிவு -எப்படி இப்படி ஒரு கவனமின்மை ?? அதிகரிக்கும் உயிரிழப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் கணிக்கைப்போர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இறால் பதப்படுத்தும் பண்ணை கடல் உணவு ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது, இங்கு ஒடிஸா, ஜாா்கண்ட் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் சுமாா் 230 போ் பணிபுரிகின்றனா்.
அங்கு வழக்கம்போல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த 70 தொழிலார்கள் மயக்கம், வாந்தி, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளால் பாதிப்புக்கு உள்ளாகினார் இதற்கு காரணமாக அங்குள்ள பிரஷர் வாழ்வில் இருந்து அம்மோனியா வாயே வெளியேறியதால் அங்க வேலை செய்து கொண்டிருந்த பணியாளர்கள் 64 பேரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர், தொழிலில் ஈடுபட்ட அனைவருமே வட மாநிலத்தவர்கள், 20 வயது முதல் 23 வயதுள்ளவர்கள்,60 பெண்களும் 4 ஆண்களும் அம்மோனியா வாயு சுவாசித்திதாதல் பெரும் இன்னல்களுக்கு அளாகியுள்ளனர் இதில் 7 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனார் இதற்கு அந்த இறால் பதப்படுத்தும் ஆலையின் முறையான அம்மோனியா கேஸ் டேங்க் கண்காணிப்பு இல்லாததே காரணமாகும்
தமிழ்நாட்டில் தொடரும் அவநிலை
இந்த வாயுவை சுவாசித்த பலருக்கும் வாந்தி, மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளுக்குக் கொண்டு அனுமதிக்கப்பட்டனர்.அவர்களில், சிலரின் உடல்நிலை கவலையளிக்கும் வகையில் இருப்பதாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்
நிறுவனத்தின் உரிமையாளரின் மீது நடவடிக்கை
பதப்படுத்தி வைக்கும் சேமிப்புக் கிடங்கில் இருந்த அம்மோனியா மூலமாக இயங்கி வந்த குளிரூட்டியில் ஏற்பட்ட கசிவால் விபத்து நிகழ்ந்துள்ளதாக இதுவரையிலான தகவல்கள் கொடுக்க பட்டுள்ளது,நிறுவனத்தின் உரிமையாளர்கள் காவலில் எடுக்கப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது,
வாயுக் கசிவு தொடர்பாக தொழிலகப் பாதுகாப்புத் துறையின் இயக்குநர், சுகாதாரத் துறையின் கூடுதல் இயக்குநர், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலர் தலைமையில் ஆய்வு மேற்கொண்டு,முழுமையான விசாரணை அறிக்கை மூன்று நாட்களுக்கு உள்ளாக சமர்பிக்கப்பட வேண்டும் என உத்தரவிட பட்டுள்ளது முதலமைச்சர் விஜய் அறிக்கையில் தெரிவித்துள்ளார்
தமிழக அரசு சார்பில் நிவாரண நிதி
உயிரிழந்த இரண்டு பெண்களின் குடும்பத்தினருக்குத் தனது இரங்கலையும் ஆறுதலையும் அறிக்கை வாயிலாகத் தெரிவித்த முதலமைச்சர் ஜோசப் விஜய், இரு குடும்பங்களுக்கும் தலா இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்
விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தொகையானது போதுமானதாக இல்லை என்றும், இழப்பீட்டுத் தொகையை ரூ. 10 லட்சமாக உயர்த்தி வழங்கவேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் இது போன்ற விபத்துகள் நடைபெறாமல் தடுக்க, அபாயகரமான தொழிற்சாலைகளில் குழு ஆய்வுகள் (Hazardous Industries Audits) மேற்கொள்ளவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

