ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்ஜோதிடம்

ஒரு சேர வரும் வைகாசி மாத அம்மாவாசை மற்றும் கார்த்திகை விரதம்- திருஷ்டியை ஒழிக்கும் நாள்

வைகாசி மாத அம்மாவாசையும், கார்த்திகை விரதமும் ஒன்று சேர வருவது அபூர்வமான ஆன்மிக நாளாகும், பொதுவாக அம்மாவாசை முன்னோர்களுக்கு பித்ருக்களுக்கு உரிய நாளாகும், மேலும் கார்த்திகை நட்சத்திரம் முருகனுக்கும் சிவனுக்கும் உரிய நாளாகும், இவை இணையும் நாளில் பலன்கள் அதிகரிக்கின்றன

முன்னோர்களின் ஆசியும் முருகரின் அருளும்

நாள் : மே 16, சனிக்கிழமை

தமிழ் தேதி : வைகாசி 2,2026

இந்த நாளில் முன்னோர்களுக்கு, புண்ணிய தலத்திற்கு சென்று, தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு,இதனால் குடும்பத்தில் உள்ள பித்ரு தோஷம் நீங்கும்

மேலும் இந்த நாளில் முருகப்பெருமானக்கு உகந்த நாளாகவும் அமைகிறது, இந்த நாளில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், புத்திர பாக்கியம் வேண்டுப்பவர்களுக்கு விரதமிருந்து வேண்டுதல் வைப்பது நல்ல பலனை கொடுக்கும்

தடைகளை உடைத்தெரியும்நாள்

பொதுவாக முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைத்தால் எந்த தொழில் தொடங்கினால் சிறப்பாக நடக்கும் என்பது நம்பிக்கை, அதே சமயம் முருக பெருமானை நினைத்து தொடங்கும் காரியமும் வெற்றியில் முடியும்

வழிபாட்டு முறைகள்

அம்மாவாசை நாளில் அதிகாலை எழுந்து,முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும், முன்னோர்களுக்கு பிடித்த உணவை வாழை இலையில் படைத்து வழிபட வேண்டும்,

இந்த நாளில் ஏழைகளுக்கு உணவழிப்பது,தான தர்மம் செய்வது சிறப்பு பலன் கொடுக்கும்

கண் திருஷ்டி ஒழிக்கும் வைகாசி அம்மாவாசை

தொழில் மற்றும் வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள் நோய்களால் பாதிக்கப்பட்டு உடல்நலம் தேறுபவர்கள் வைகாசி அமாவாசை தினத்தில் திருஷ்டி பூசணிகாய் வாங்கி, உங்கள் தொழில், வியாபார இடங்களை திருஷ்டி கழித்து அதற்குரிய நேரத்தில் உடைக்க வேண்டும்.

சுபிட்சங்கள் பெருகும். திருமணத்தடை, புத்திர பாக்கியமின்மை போன்ற குறைபாடுகள் நீங்கும். தொழில், வியாபாரங்களில் நஷ்ட நிலை நீங்கி நல்ல லாபங்கள் ஏற்படும்.

குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கும் நிலை உண்டாகும். கடன், வறுமை நிலை போன்றவை ஏற்படாமல் காக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *