மீனாவை கடத்தி வைத்திருக்கும் சிந்தாமணி – சிந்தாமணியின் கண்ணாமூச்சி ஆட்டம் ஆரம்பம்
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று சிந்தாமணியின் வில்லத்தனம் மெதுமெதுவாக உருவெடுக்கிறது இதுவரைக்கும் முத்துவின் மீனாவின் புத்திசாலித்தனம் தான் சீரியலில் காட்டப்பட்டது இன்று எப்படியாவது தன் மகள் ரேகாவை முத்துவேக் கொண்டு வந்து சிந்தாமணி இடம் ஒப்படைக்க சிந்தாமணி ஒரு மாஸ்டர் பிளான் போட்டிருக்கிறார், சத்யாவின் குடும்பத்திற்கே பெரும் பயத்தை காட்டியிருக்கிறார் சிந்தாமணி
credits – Google

ரோகிணியின் சூழ்ச்சி
மனோஜன் விஜயாவும் அட்வகேட் கிருஷ்ணா ராமிடம் ரோகிணி விவாகரத்து கொடுப்பதை பற்றி சொல்லியும் ரோகினி இடம் நீங்களே பேசி இந்த விஷயத்தை முடித்து விடுங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள், அதேபோல் கிருஷ்ணா ராமும் ரோகினிக்கு போன் செய்து, மனோஜ் சொல்வதெல்லாம் உண்மையா ?? மனோஜ் உங்களுக்கு ஐந்து லட்சம் தந்தால் நீங்கள் விவாகரத்து கொடுத்து விடுவீர்களா என்று கேட்கிறார், அதற்கு ரோகிணியும் நானும் பலமுறை சொல்லிவிட்டேன் மனோஜ் என்கூட வந்து வாழ்ற மாதிரி தெரியல எல்லாத்துக்கும் காரணம் எங்க மாமியார் ராட்சசிதான் இனிமேலும் என்னால் போராட முடியாது ஆனால் ஐந்து லட்சமும் ஒரே செட்டில்மெண்டாக கொடுத்தால் தான் விவாகரத்து கொடுப்பேன் எனவும் சொல்லிவிட்டார்
ஆனால் ரோகிணி இந்த அஞ்சு லட்சம் பணம் உங்களுக்கு கிடைக்கவே கூடாது இந்த அஞ்சு லட்சம் கொடுக்க முடியாமல் மனமும் என் கூட வந்து வாழனும் அப்படின்னு வேண்டிக்கிட்டு இருக்காங்க, அட்வகேட் கிருஷ்ணா ராமும் துரோகனையே நம்ம விலைக்கு வந்துட்டா அப்புறம் என்ன அஞ்சு லட்சத்தை கொடுத்து டிவோர்ஸ் வாங்கிட வேண்டியதுதானே! சீக்கிரம் பணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க அப்புறம் நான் பாத்துக்குறேன் அப்படின்னு சொல்லிட்டாங்க!
ரோகினி நினைத்தது போலையே மனோஜும் இருக்கிறார்
அதற்கு மனோஜ் என்னால் 5 லட்சம் எல்லாம் ஏற்பாடு பண்ண முடியாது நான் ஒரு ஆளா எப்படி அஞ்சு லட்சத்தை ஏற்பாடு பண்றது அப்படின்னு கேள்வி கேட்கிறார், பதிலுக்கு கிருஷ்ணா ராமு மனோஜின் மூக்கை உடைக்கிறார் நீங்கள்தான் பெரிய business man என்று விஜயா வாய்க்கு வாய் சொல்லிக் கொண்டே இருக்கிறார் உங்களால் 5 லட்சம் கூட ஏற்பாடு செய்ய முடியாதா?? என்று இருந்தாலும் மனசே இருக்கு 5 லட்சம் புரட்ட முடியுமா என்று சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது, விஜயாவும் நீ தான் பணத்தை கொடுத்தாகணும் எப்படியாவது ஏற்பாடு பண்ண அப்படின்னு சொல்லிட்டாங்க இனி அடுத்த மனோஜ் இந்த பணத்தை எப்படி கொண்டுவரபோகிறாரோ??
சந்திராவின் பயம்
அடுத்த நாள் அதிகாலையிலேயே சந்திரா மீனாவிற்கு போன் செய்கிறார், சிந்தாமணியின் அடியார்கள் எப்பொழுதும் சந்திராவை பின் தொடர்ந்து வருவதாகவும் எந்த நேரமும் நம் வீட்டை பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள் என்று எனக்கு பயமாக இருக்கிறது என்றும் சந்திரா வருத்தத்துடன் கூறிக் கொண்டிருக்கிறார், இதை முத்தூட் மீனாவும் கலந்து யோசித்து சந்திராவே கொஞ்ச நாட்கள் பார்வதி அத்தை உடன் தங்க வைக்க முடிவு செய்கிறார்கள், அதற்காக காலையில் மீனா பார்வதியை சந்தித்து எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் சத்யாவிற்கும் ரேகாவிற்கும் திருமணமாகும் வரை என் அம்மாவை உங்கள் வீட்டில் வைத்திருங்கள் என கூற நான் பார்த்து கொள்கிறேன் நீ உன் அம்மாவை அழைத்து வா என பார்வதி கூறி விட்டாள்
credits -google

சிந்தாமணியின் கண்ணாமூச்சி ஆட்டம்
ரொம்ப நேரம் ஆகியும் மீனா வராததால் முத்து மீனாவை தேட ஆரம்பிக்கிறான், ஏற்கனவே சந்திராவை அடியாட்களை வைத்து பயமுறுத்தி இருக்கிறாள் சிந்தாமணி, முத்துவும் பார்வதிக்கு போன் செய்து கேட்கிறான், மீனா எப்போதோ போய் விட்டாளே! அவளுக்காக தான் காத்து கொண்டு இருக்கிறேன் என்று பார்வதி சொல்கிறாள் அடுத்து முத்து அவன் மாமியாருக்கு போன் செய்து கேட்கிறான், மீனா என்ன அழைத்து செல்ல ready ஆக சொன்னாள் ஆனால் இன்னும் வரவில்லை என்று சொல்கிறாள்
முத்துவிற்கு ஏற்படும் சந்தேகம்
முத்து படபடப்பாக இருப்பதை பார்த்த அண்ணாமலையும் ரவியும் மீனாவிற்கு ஒன்றும் இல்லை வந்து விடுவாள் என்று கூற, முத்துவிற்கு மனம் கேட்காமல் மீனா வழக்கமாக செல்லும் எல்லா இடங்களுக்கும் சென்று விட்டான், மீனாவை யாரும் பாக்கவில்லை அடுத்து சிந்தாமணி மீது தான் முத்துவிற்கு சந்தேகம் வருகிறது, இனி அடுத்து முத்து என்ன செய்ய போகிறான், மீனாவிற்கு என்னதான் ஆனது அடுத்து என்ன நடக்கும் பொருந்திருந்து பாக்கக்கலாம்

