electionசெய்திகள்தமிழகம்

டெல்லியில் நடைபெற்ற I.N.D.I.A கூட்டத்தை தவிர்த்த திமுகவினர்- காங்கிரசின் தேர்தல் அணுகுமுறையால் அதிருப்தி – பாஜகவை எதிர்த்து பேசப்பட்ட விமர்சனங்கள் மற்றும் வியூகங்கள்

டெல்லியில் இன்று ஜூன் 8 நடைபெற்ற இந்தியா (I.N.D.I.A) கூட்டணி கூட்டத்தில், தேசிய அளவிலான முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நீட் மற்றும் சிபிஎஸ்இ முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

I. N. D. I. A கூட்டணியை தவிர்த்த திமுகவினர்

இதில் காங்கிரஸ், திரிணமுல் காங்., சமாஜ்வாதி, விசிக, மதிமுக உள்பட 23 கட்சிகள் பங்கேற்றன. காங்கிரஸ் மீதான மனக்கசப்பால் திமுக இதில் பங்கேற்கவில்லை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்று தேர்தலைச் சந்தித்து, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தவெகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்த விசிக தலைவர் திருமாவளவன், இந்தக் கூட்டத்தில் திமுகவைக் குறிப்பிட்டு பேசியது பெரிதும் கவனத்தைப் பெற்றது.திமுக புறக்கணிப்பதாக அறிவித்த ”இந்தியா” கூட்டணி கூட்டம் டெல்லியில் நடந்து முடிந்தது.

காங்கிரஸ் கட்சியினருக்கு விசிக தலைவர் திருமாவளவன் கூறிய அறிவுரை

அண்மையில் நடந்து முடிந்த தேர்தல்களின் போது காங்கிரஸ் கட்சி கையாண்ட அணுகுமுறையால் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ளதிமுக,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்றவைக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது,காங்கிரஸ் கட்சி தனது அணுகுமுறையை மறு ஆய்வு செய்து இந்த ஒற்றுமையை இன்னும் வலுவாக முன்னெடுப்பதற்கான வழிகளை கண்டறிய வேண்டும்” என இக்கூட்டத்தில் திருமாவளவன் பேசினார்.

விசிக தலைவர் திருமாவளவன் திமுகவினருக்கு ஆதரவாக பேசியதை தற்போது அவர் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்,

கூட்டத்தில் பாஜக அரசின் மீது வைக்கப்பட்ட விமர்சனம்

SIR என்ற “சிறப்பு தீவிர திருத்தம் “என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர், இது தொடர்பாக இந்திய தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது

நீட் தேர்வு போன்ற அரசு தேர்வுகளில் வினாத்தாள் கசிந்த விவரம் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டது

எரிவாயு சிலிண்டர் மற்றும் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடி தொடர்பாக பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளது

வியூகங்கள்

பாஜக அரசை எதிர்கொள்ள ஐந்து அம்ச செயல் திட்டத்தை இந்தியா கூட்டணி வகுத்துள்ளது, ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையும் கூட்டணி முக்கிய தலைவர்கள் ஒன்று கூடி ஆலோசனை செய்ய முடிவெடுக்க பட்டுள்ளது

கூட்டணி கட்சிகள் ஒன்றை ஏற்று விமர்சர்ப்பதை தவிர்த்து, சமூக ஊடகங்களில் INDIA PARTIES என்ற பெயரில் வலுவான இருப்பை உருவாக்கி, பாஜகவை விமர்சிப்பதையும், எதிர்கொள்வதையும் குறிக்கோளாக இருப்பதில் கவனத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது

குறிப்பாக, திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்ற மாநில கூட்டணி கட்சிகள் உட்பூசல் வெளிப்பட்டன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *