ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்ஜோதிடம்பஞ்சாங்கம்வாழ்வியல்

சித்திரை மாத சிறப்பு அஷ்டமி நன்னாள் -” மஹா கால பைரவாஷ்டமி- சிறப்பு பள்ளய பூஜை

சித்திரை மாதத்தில் வரக்கூடிய தேய்ப்பிறை அஷ்டமி நாளிர்க்கு சிறப்பான பலன் உண்டு, சித்திரா பௌர்ணமி அடுத்து வரும் அஷ்டமி நாளாகும், இந்த நாள் சிவபெருமானின் அம்சமான கால பைரவரை வழிபட கூடிய நாளாகும். இந்த தேய்பிறை அஷ்டமியை “மஹா கால பைரவாஷ்டமி” என்று அழைக்கப்படுகிறது. இந்த நாள் காலபைரவரை வழிபடும் பொழுது பகைவர்களின் தொல்லை எதிரிகளின் பயன்கள் போன்றவற்றை போக்கலாம்

மகா கால பைரவாஷ்டமி தேதி மற்றும் நேரம்

தேதி : மே 9 2026, சனிக்கிழமை

தமிழ் தேதி: சித்திரை 26 சனிக்கிழமை

அஷ்டம திதி : மே 9 அதிகாலை 2.26 மணி தொடங்கி மே 10 அதிகாலை2.26 மணிக்கு முடிவடைகிறது

மகா கால பைரவாஷ்டமியின் சிறப்புகள்

பொதுவாக சித்திரை அஷ்டமி என்பது காலபைரவரை வழிபடுவதற்கான சிறந்த நாளாகும் அதுவும் குறிப்பாக சனிக்கிழமையில் வருவதால் இந்த அஷ்டமி நாளில் காலபைரவரை வழிபடும்போது சந்தோசம் இருப்பவர்களுக்கும் இந்த வழிபாடு மிகப்பெரிய ஒரு பரிகாரமாக அமையும்

அனைத்து சிவன் கோவில்களிலும் முதல் பூஜை விநாயகருக்கு என்றால் கடைசி பூஜை கால பைரவருக்கே சேரும், பயம்,பதட்டம், தீய சக்திகள் மற்றும் விபத்துகளில் இருந்து பக்தர்களை பாதுகாக்கும் அது சக்தி வாய்ந்த சிவ சொரூபமாக கால பைரவர் அமைகிறார்

சனி தோஷம் நீக்கும் மகா கால பைரவாஷ்டமி

சனி பகவானின் பாதிப்பு உள்ள ராசிகள் மற்றும் ஏழரை சனி, அஷ்டம சனி, ஜென்ம சனி நடப்பவர்களுக்கு காலபைரவரின் அருளை பெறும் பொழுது சனிபகவான பகவானின் தாக்கத்தில் இருந்து சற்று விடுபடலாம். குறிப்பாக காலபைரவருக்கு பழைய பூஜை செய்து வழிபடும் போது சனிதோஷங்கள் நீங்கும்

கால பைரவரின்” பள்ளய பூஜை “

அஷ்டமி நாளின் இரவு 7 மணிக்கு பிறகு கால பைரவருக்கு விசேஷமான பள்ளய பூஜை நடத்தப்படுகிறது, இதில் காலபைரவருக்கு முன் வாழை இலை ஒன்றை விரித்து அதன் மேல் தயிர் சாதம்,உளுந்த வடை,மிளகு சாதம், கார உணவு வகைகள் படைக்கப்படுகின்றன, b பின்னர் காலபைரவருக்கு தீபாரதனை செய்து வழிபட்ட பிறகு அந்த உணவுகளை பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன.

அந்தந்த ராசிக்குரிய பொருட்களால் பைரவரை வழிபட்டால் கிரக தோஷங்கள் குறையும். தடைப்பட்ட காரியங்கள் நடைபெறும். கடன் சுமைகள் குறையும், மன அமைதி கிடைக்கும், குடும்பத்தில் இருந்த சண்டைகள் அகலும்

இந்த பழைய பூஜை செய்யும் பொழுது மரண பயங்கள், தீய சக்திகள்,எதிரிகள் தொல்லைகள் கண் திருஷ்டி அகலும்

தொழில் வளர்ச்சி, கடன் நிவர்த்தி, செல்வ வளம், குடும்ப அமைதி, எதிரி தொல்லை நீக்கம் ஆகியவற்றிற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகாகால பைரவாஷ்டமி நாளில் பைரவரை வழிபடுகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *