சமையல் குறிப்புசினிமாசின்னத்திரை

“உனக்கு வேற ஆம்பளையே கிடைக்கலயா??”-ரோகினியை அவமான படுத்தும் விஜயா – முத்துவுக்கு 2 நாள் time கொடுக்கும் விஜயா

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறக்கடிக்க ஆசை சீரியலில் இன்று, ரோகினியை அவமான படுத்தும் விஜயா, எதுவும் பேசாமல் நின்ற மனோஜ் கோவத்தில் மனோஜை வெளுத்து வாங்குகிறார் ரோகினி, அடுத்து மீனா வீட்டில் விஜயாவை அவமான படுத்தும் சக தோழிகள் என்ன நடந்தது பார்க்கலாம்

ரோகினியை வெளுத்து வாங்கும் விஜயா

மனோஜை சந்திக்க வந்த ரோகினியை பார்த்த விஜயா வீட்டில் இருந்தே ரோகினியை அவமான படுத்தி கொண்டிருக்கிறாள், ” அடியே பார்லர் காரி, ” இந்த கடைய விட்டு வெளியே போடி, இப்படி மூஞ்சியல powder போட்டு, பேரை மாத்திக்கிட்டு ஆம்பளைக்கு அலையரையே வெக்கமா இல்லையா உனக்கு ” னு கடையில இருக்க எல்லாரு முன்னாடியும் திட்டிக்கிட்டு இருக்காங்க

திருத்திருனு முழிக்கும் மனோஜ் – கேமராவை கழட்டி வீசும் ரோகினி

கடையில் இருக்கறவங்க முன்னாடி இப்படி அசிங்க படுத்துறாங்கலேன்னு ரோகினிக்கு கோவம் வந்து கேமராவை கழட்டி வீசுறாங்க, அடுத்து மனோஜ்க்கு திட்டுக்கு மேல திட்டு தான் விழுகுது, “நீ என் புருஷன் உன்ன பார்க்க நா வரக்கூடாதா?? கல்லு மாறி நிண்ணுகிட்டே இருக்க உங்க அம்மாவை என்னனு கேட்கமாட்டியா?? னு ரோகினி திட்டிகிட்டு இருக்காங்க, அப்போ கூட மனோஜ் அம்மாவுக்கு கோவம் வந்தா இப்படி தான் நடந்துக்குவாங்கனு சொல்ராரு, என்ன இப்படி அசிங்க படுத்தனுதுக்கு உங்க அம்மா கண்டிப்பா ஒரு நாள் பீல் பண்ணுவாங்கனு சொல்லிட்டு ரோகினி கோவமா கிளம்பிட்டாங்க

மீனா வீட்டில் விஜயாவிற்கு மானம் போனது

அடுத்து விஜயா வீட்டுல வேலை செஞ்சுட்டு இருக்காங்க, அந்த நேரம் பார்த்து சந்திராவை பார்த்து பத்திரிகை கொடுக்கிறதுக்காக அவனுக்கு தெரிஞ்சவங்க வந்து இருக்காங்க, இப்பதான் ஒரு நாள் கூட உங்களை விஜயா மனச மாறி அவங்களே சாப்பாடு செஞ்சு வீட்டுல வேலை எல்லாம் செஞ்சுட்டு இருந்தாங்க, அத கெடுக்கிற மாதிரியே வந்தவங்களும் பிசியாக வைத்து கிண்டல் பண்ணிட்டு இருக்காங்க, சந்திரா அக்கா அப்படி கடி சொல்லுவாங்க மீனாவுக்கு கொடுமக்கார மாமியாரா இருக்காங்க அப்படின்னு, கடைசில விதி பாத்தியா இவங்களை இங்கேயே கொண்டு வந்து சேர்த்துருச்சு இவங்க பண்ண கொடுமை எல்லாம் தான் இவ்வளவு கர்மாவா வந்து சேர்ந்து இருக்கு ” அப்படின்னு பேசிகிட்டு இருக்காங்க

நான் கொடுமைக்கார மாமியாரா?? இப்படி தான் எல்லாரு கிட்ட சொல்றீங்களா??

சந்திர வந்த உடனே விஜயா சண்டை போட ஆரம்பிச்சிட்டாங்க ” என்ன இப்படித்தான் ஊருக்குள்ள சொல்லிக்கிட்டு இருக்கீங்களா, நான் என்ன கொடுமக்கார மாமியாரா?? உங்க வீட்டுக்கு வந்ததுக்கு எனக்கு எந்த அவமானம் தேவையா?? அப்படின்னு சந்திரா கிட்ட கேள்வி கேட்டுகிட்டு இருக்காங்க, ஆனா சந்திரனா நான் அப்படி சொல்லவே இல்ல நான் சும்மா எதார்த்தமா நீங்க ஸ்ட்ரீட்டா இருப்பீங்கன்னு சொல்லி இருக்காங்க, அதைத்தான் அவங்க அப்படி புரிஞ்சுகிட்டு பேசுறாங்க என்னை மன்னிச்சுக்கோங்க அப்படின்னு சந்திராவும் மன்னிப்பு கேட்டுகிட்டு இருக்காங்க

முத்துவுக்கு விஜயா கொடுக்கும் கெடு

விஜயாவுக்கு கோபம் வந்து” நான் இனி இந்த வீட்டிலேயே இருக்க போறது இல்ல நான் ஏதாவது ஆசிரமத்தில் தங்கிக்கிறேன்,இந்த அவமானத்தை எல்லாம் தாங்கிக்க முடியாதுனு சொல்லிக்கிட்டு இருக்காங்க அப்பன்னா பார்த்து மீனாவும் முத்துவும் உள்ள வர மீனாவுக்கு இந்த விஷயம் தெரிஞ்சு மீனாவும் எவ்வளவோ கன்வின்ஸ் பண்ண பார்க்கிறாங்க, ஆனா விஜய்யா கேட்ட பாடில்ல கடைசியா முத்து தான் ” நம்ம 10 லட்சம் கட்டி கோர்ட்ல ஸ்டே ஆர்டர் வாங்கிக்கலாம்னு வக்கீல் சொல்லி இருக்காங்க அந்த மாதிரி பண்ணிக்கலாம் எனக்கு ரெண்டு நாள் டைம் கொடுங்க அப்படி இல்ல அப்படின்னா என்னோட ரெண்டு கார், வேன் எல்லாத்தையும் வித்து ஆவது அந்த பத்து லட்சத்தை கட்டி உங்கள திருப்பியும் அந்த வீட்டுக்கு கூட்டிட்டு போய் விடுறேன் அப்படின்னு சொல்லி இருக்காரு, விஜயாவும் உனக்கு இந்த ரெண்டு நாள் மட்டும் தான் டைம் அப்படி கூட்டிட்டு போகல வீட்ட மேய்க்கலாம் அப்படின்னா நான் ஆசிரமத்துக்கு போயிடுவேன் அப்படின்னு ஏதோ முத்துவும் மீனாவும் கடன் வாங்கி இருக்கிற மாதிரி பேசிட்டு இருக்காங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *