Newsசெய்திகள்தமிழகம்வாழ்வியல்விழிப்புணர்வு

அம்மா உணவகங்கள் சீரமைப்பு – முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு குவியும் வாழ்த்துக்கள்

அம்மா உணவகம் திட்டத்தின் மூலம் பல ஏழை எளிய தொழிலார்கள், பொது மக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவர்கள் என பலரும் பயன்பட்டு வந்தனர், கடந்த திமுக ஆட்சியில் அம்மா உணவகங்கள் சரிவர இயங்கவில்லை, உட்கட்டமைப்பு மேம்படுத்துதல், நவீன மையமக்குதல் என காரணம் காட்டி வந்தது, தற்போது அமைந்துள்ள தவெக அரசு அதில் கவனம் செலுத்தி வருகிறது, அம்மா உணவகங்களை சீரமைக்க

credits – Google

அம்மா உணவகத்தின் ஆரம்பம்

“அம்மா உணவகம் ” திட்டமானது 2013 ஆம் ஆண்டு புரட்சித்தலைவி ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது, இந்த திட்டமானது ஏழை எளிய உறக்கம் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது முதல் முதலில் சென்னையில் தொடங்கப்பட்டு பின்பு தமிழகம் முழுவதும் விரிவு படுத்தப்பட்டது

இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு மானிய விலையில் உணவு வழங்கிய இந்த உணவகங்கள் உடனடியாக பெரும் வரவேற்பைப் பெற்றன.

திமுக ஆட்சியில் சொல்லப்பட்ட காரணங்கள்

அம்மா உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்களை ஆளும் தி.மு.க கட்சியினர் மிரட்டுவதாகவும், அரசியல் தலையீடுகள் இருப்பதாகவும் Instagram பதிவாகியுள்ளது அதிர்ச்சிக்கு உள்ளது

தி.மு.க ஆட்சிக்காலத்தில் அம்மா உணவகங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் முறையாகப் பயன்படுத்தப்படவில்லையென்றும், உணவகங்கள் கேட்பாரற்று விடப்பட்டதாகவும் முன்னாள் அமைச்சர்கள் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

திமுக ஆட்சி காலத்தில் அம்மா உணவகங்கள் முறையாகப் பராமரிக்கப்படாமல், குடிநீர் வசதிகள் செயல்படாமல், மதுபாட்டில்கள் கிடந்த அவல நிலைகள் கண்டுபிடிக்கப்பட்டதால், அப்போதைய ஆளுங்கட்சியான தி.மு.க-வை எதிர்த்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன, ஒரு ஆண்டாக குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் (RO) இயங்காததும், காலி மதுபாட்டில்கள் கிடந்ததும் கண்டறியப்பட்டு, தி.மு.க ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது

தவெக அரசின் அதிரடியான முடிவு

விஜய் அந்தப் பாரம்பரியத்தைத் தொடர்வதோடு, அம்மா உணவகங்களின் உள்கட்டமைப்பைப் புதுப்பித்து மேம்படுத்தவும், மக்களுக்குச் சுவையான மற்றும் தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவின் தரமும் சுவையும் திருப்திகரமாக இல்லை என்ற கருத்து முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, அவர் உயர் அதிகாரிகளுடன் ஒரு ஆய்வுக் கூட்டத்தை நடத்தி,வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், மேலும் சமையல் பாத்திரங்கள்/உபகரணங்களைக் கொள்முதல் செய்யவும், அதன் மூலம் மக்களுக்குத் தரமான மற்றும் சுவையான உணவு கிடைப்பதை உறுதி செய்யவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்

ஜோசப் விஜக்கு குவியும் பாராட்டு தெரிவித்த தலைவர்

முதலமைச்சரின் இந்த அதிரடியான உத்தரவிற்கு கட்சி தலைவர்கள், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்,தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை சீரமைக்க முதல்-அமைச்சர் பிறப்பித்திருக்கும் உத்தரவு வரவேற்புக்குரியது – அம்மா உணவகங்களின் அவசியத்தை உணர்ந்து அத்திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *