TOP STORIESசெய்திகள்

குழந்தைகளைக் கண்டு அஞ்சும் கொரோனா…!

உலக விஞ்ஞானிகளை அதிரவைத்த தகவல் என்ன தெரியுமா…? குழந்தைகளைக் கண்டு அஞ்சும் கொரோனா. அதாவது கொரோனா குழந்தைகள் உடலில் நுழையுமா? நுழையதா? என்று கேட்டால், நுழையும். ஆனால், முழு வீரியத்துடன் தாக்க முடியவில்லை. தோல்வியை சந்திக்கிறது குழந்தைகளின் உடலைப் பொறுத்த வரை. பெரியவர்களையும் வயதானவர்களையும் தாக்கும் அளவு குழந்தைகளின் நுரையீரலை தாக்க முடிவதில்லை.   

      கொரோனா வைரஸ்ஸின் ஸ்பெஷல் அதாவது அதனுடைய சிறப்பம்சம் மற்ற வைரஸிலிருந்து என்னவென்று கேட்டால், நுரையீரலைத் தாக்கும், மரணம் வரை கொண்டு செல்லும். ஆனால் குழந்தைகள் விஷயத்தில் கொரோனாவின் வீரியம் குறைவு தான் என உலக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.        பெரியவர்களின் மூச்சுக் குழாயை தாக்கி நுரையீரலை சேதப்படுத்தும் கொரோனா, சிறுவர்களின் கீழ் மூச்சு குழாயை தாக்க முடியாமல் திணறுகிறது. இதற்கான காரணம் என்ன தெரியுமா…?

காரணம் என்ன தெரியுமா…?

கொரோனா வைரஸ் மனித செல்களில் ஒட்டிக்கொள்ள செல்லின் புரதம் உதவுகிறது. குறிப்பாக ஏசிஇ 2(ACE 2 ANGIOTENSIN CONVERTING ENZYME 2).வைரஸ் என்றுமே தனித்து வாழாமல்  செல்களை ஆக்கிரமித்து வாழும். அந்த மாதிரி மனித செல்களில் உள்ளே வருவதற்கு ACE 2 மூலமாகத்தான் வருகிறது.ACE 2 வளர்ந்தவர்களின் மூச்சுக்குழாயில் இருக்கும் அளவிற்கு குழந்தைகளின் கீழ் மூச்சுக் குழாயில் இல்லை. அதனால்தான் குழந்தைகளிடம் கொரோனா வாலாட்ட முடிவதில்லை.    

கொரோனா தொற்று பாதிப்பால்

    மூச்சுக்குழாயில் ACE 2 பயன்படுத்தி உள்ளே வந்தாலும் அதாவது நுரையீரலுக்கு சேதத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால் மேல் மூச்சு வரைக்கும் தான் குழந்தைகளை பாதிக்கிறது. ஜலதோஷம் போன்ற லேசான அறிகுறிகளை காட்டி விட்டு வெளியேறி விடுகிறது. ஆனால் வளர்ந்தவர்களைப் பொறுத்தவரையில் ACE 2 மூலம் கீழ் மூச்சுக்குழாயில் புகுந்து ருத்ர தாண்டவம் ஆடுகிறது. நுரையீரலை சேதப்படுத்தி மரணம் வரை அழைத்துச் செல்கிறது.  

  கொரோனா தொற்று பாதிப்பால் சீனாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் 98 சதவிகிதம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்காங்களே அவர்கள் 19 வயதுக்கு மேல் எனவும், 2 சதவிகிதம் 19 வயதுக்கு கீழ் என்று ஆய்வில் தெரிந்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *