செய்திகள்தமிழகம்

தமிழகத்தில் இடைக்காலப் பட்ஜெட்

தமிழகத்தில் இடைக்காலப் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நடப்பு நிதியாண்டில் பற்றாக்குறை நிதி பட்ஜெட் 41 417,30 கோடியாக இருக்கின்றது என நிதியமைச்சர் அறிவித்திருக்கின்றார். இன்று அறிவித்து வரப்பட்ட வருகின்ற இடைக்கால பட்ஜெட் நிதியமைச்சர் மற்றும் துணை முதல்வரான ஓ. பன்னீர்செல்வம் நீதி பட்ஜெட்டை வாசிக்கின்றார். ஓ.பன்னீர்செல்வம் இத்துடன் 11வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கொரோனா காலத்தில் இந்தியாவில் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பானது பெருமளவில் இருந்தது 98.5% மேல் தமிழ்நாட்டில் கோவித்-19 தாக்கம் அடைந்து சிகிச்சை பெற்று குணமாகியுள்ளனர்.

கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகின்றது தமிழ்நாடு 3.85 லட்சம் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது தொற்று காரணமாக நிதி பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கின்றது என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

பட்ஜெட் சிறப்பு அறிவிப்புக்கள்

பட்ஜெட் சிறப்பு அறிவிப்புகள் பார்க்கலாம் வாங்க என்னதான் பற்றாக்குறை பட்ஜெட் போட்டாலும் தேர்தல் வருகின்றது என்பதை மனதில் வைத்து ஆளும் கட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்து இருக்கின்றது.

இந்த பட்ஜெட்டில் சிறப்பம்சமாக ரூபாய் 5000 கோடி விவசாயிகளுக்காக பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும் வரும் 2022 தாமிரபரணி கருமேனியாறு மற்றும் நம்பியார் இணைப்புத் திட்டம் மூடிய முடிவடையும் என்று இந்த பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த பட்ஜெட்டில் கல்லணை கால்வாய் புனரமைப்பு மற்றும் சரபங்கா நீரேற்று திட்டம் ஆகியவை பேசப்பட்டு வருகின்றன மேலும் மாற்றுத் திறனாளிகளுக்காக ரைட்ஸ் எனப்படும் சிறப்பு திட்டம் ரூபாய் 688 கோடி நிதி ஒதுக்கீடு மூலமாக செய்யப்படுகின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *