Jallikattu bullsஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்வாழ்வியல்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -15.09.2026

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம் 15.09.2026

பரபாவ வருடம் ஆவணி 29, செவ்வாய்க்கிழமை, September 15, 2026 பஞ்சாங்கம் –

திதி : 07:44 AM வரை சதுர்த்தி பின்னர் பஞ்சமி

நட்சத்திரம் : ஸ்வாதி 03:21 PM வரை பிறகு விசாகம்

யோகம் : மாஹேந்த்ரம் 12:19 PM வரை, அதன் பின் வைத்ருதி

கரணம் : பத்திரை 07:44 AM வரை பிறகு பவம் 08:17 PM வரை பிறகு பாலவம்.

சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்

நல்ல நேரம் காலை : 06.15 மணி முதல் 07.15 வரை

நல்ல நேரம் மாலை: 04.45 மணி முதல் 05.45 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 07.30 முதல் 09.00 மணி வரை

எமகண்டம் : காலை 10.30 முதல் 12.00 மணி வரை

குளிகை: காலை 01.30 மணி முதல் 03.00 மணி வரை

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

இன்றைய ராசிபலன் (15.09.2026)

மேஷம் -பயம் உண்டாகும்

ரிஷபம் -கவலை உண்டாகும்

மிதுனம் -தாமதம் ஏற்படும்

கடகம் -லாபம் பெருகும்

சிம்மம் – அச்சம் உண்டாகும்

கன்னி -போட்டி கூடும்

துலாம்-வரவு அதிகரிக்கும்

விருச்சிகம்-எதிர்ப்பு உண்டாகும்

தனுசு -நன்மை பிறக்கும்

மகரம் -செலவு உண்டாகும்

கும்பம் -ஆதாயம் உண்டாகும்

மீனம் -ஆரோக்கியத்தில் சுகம்

விநாயகர் சதுர்த்தி அன்று சிலை வழிபாடு முடிந்து ஏன் நீரில் கரைக்கிறோம்??

விநாயகர் சதுர்த்தி விழாவில் விநாயகர் சிலையை களிமண்ணால் செய்து, வழிபாடு முடிந்து நீரில் கரைப்பதற்குப் பின்னணியில் ஆழமான ஆன்மீக, தத்துவ மற்றும் சுற்றுச்சூழல் காரணங்கள் உள்ளன:

களிமண்ணால் செய்யப்படும் சிலை, கடவுள் உருவமாக மாறி, வழிபாட்டிற்குப் பின் மீண்டும் மண்ணோடும் நீரோடும் கலக்கிறது. “மண்ணில் இருந்து பிறந்த எதுவும் இறுதியில் மண்ணுக்கே திரும்பும்” என்ற இயற்கையின் நிலையற்ற தத்துவத்தையும், மனித வாழ்க்கையின் தொடக்கம் மற்றும் முடிவையும் இது நினைவூட்டுகிறது.

இறைவன் வடிவம் இல்லாதவன் (அருவம்). அவனை வழிபட நாம் களிமண் மூலம் ஒரு வடிவம் (உருவம்) தருகிறோம். வழிபாடு முடிந்ததும் சிலையை நீரில் கரைப்பதன் மூலம், இறைவன் மீண்டும் வடிவம்ற்ற பிரபஞ்ச ஆற்றலாகவே மாறிவிடுகிறான் என்பதை இது குறிக்கிறது.

  • களிமண் சிலைகளை ஏரி, குளம், நதிகளில் கரைக்கும்போது, களிமண் நீரில் கலந்து நீர்நிலைகளின் அடிப்பகுதியை இறுகச் செய்து, நீர்க் கசிவைத் தடுக்கும்.
  • முற்காலத்தில் களிமண்ணுடன் அருகம்புல், எருக்கு, மஞ்சள், சந்தனம் போன்ற இயற்கை மூலிகைகளைச் சேர்த்து சிலை செய்தனர். இவை நீரில் கரையும் போது, மழைநீரில் உள்ள கிருமிகளை அழித்து நீரைச் சுத்திகரிக்கும் திறன் பெற்றிருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *