ஆன்மிகம்ஆலோசனை

திருக்கார்த்திகை தீபங்கள் எப்படி ஏற்ற வேண்டும்? எந்த திசையில் ஏற்றினால் என்ன பலன்?

கார்த்திகை மாதம் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது திருகார்த்திகை தீபம். திருவண்ணாமலை தீபம் ஏற்றும் திருநாளில் திருகார்த்திகை தீபம் என்று கூறப்படுகிறது. அன்றைய தினம் பௌர்ணமி சேர்ந்து வருகிறது. திருவண்ணாமலை சென்று அந்த தீபத்தை தரிசனம் செய்வதால் அண்ணாமலையாரின் அருளைப் பெற முடியும். அந்த தீப திருநாளில் எந்த திசையில் தீபம் ஏற்றினால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று தெரிந்து கொண்டு ஏற்றுவது நல்லது.

  • பௌர்ணமி சேர்ந்து வருகிற திருகார்த்திகை தீபம்
  • விளக்கை சுத்தம் செய்வது எந்தெந்த நாட்களில் செய்ய வேண்டும்
  • எந்த திசையில் தீபம் ஏற்றினால் என்ன பலன்கள்

எந்த திசையில் தீபம் ஏற்றலாம்

கிழக்கு திசையை நோக்கி தீபமேற்ற வாழ்வில் துன்பங்கள், கிரக தோஷம் நீங்கி லட்சுமி கடாட்சம் கிடைக்கும். வீடு இல்லாதவர்களுக்கு வீடு வாங்கும் யோகம் உண்டாகும் என்பது ஐதீகம்.

தென்கிழக்கு திசையில் தீபம் ஏற்ற குழந்தைகளுக்கு புத்திகூர்மை அதிகரித்து, குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். தென்கிழக்கு திசையில் தீபம் ஏற்றி தன் குழந்தைகளுக்கு நெற்றியில் இடுவதால் நல்ல பலன் கிடைக்கும்.

தெற்கு திசையை நோக்கி தீபம் ஏற்றக்கூடாது. இப்படி ஏற்றுவதால் மரணம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. வீட்டில் யாராவது இறந்துவிட்டால் வசதி இல்லாதவர்கள் கோவிலில் தெற்கு நோக்கி தீபம் ஏற்றுவதால், இறந்தவர்களுக்கு நல்ல அனுக்கிரகத்தைப் பெற்று தரும் என்று முன்னோர்கள் கூறுவார்கள்.

தென் மேற்கு திசையில் தீபம் ஏற்ற பெண்கள் மற்றும் ஆண்களால் வரும் துன்பங்கள், கழகம் மற்றும் திருமணத் தடங்கல்கள் நீங்குகிறது.

மேற்கு திசையில் தீபம் ஏற்ற பணத்தால் வந்த பகைமை வளராமல் தீரும். கடன் தொல்லைகள் நீங்குகின்றன.

வடமேற்கு திசையை நோக்கி தீபமேற்ற சகோதர சகோதரிகள் இடையே ஒற்றுமை நிலவுகிறது. குடும்பச் சண்டைகள் நீங்கும்.

வடக்கு திசை நோக்கி தீபம் ஏற்றினால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். மாங்கல்யத்தை பேணி மதிக்காத பாவம் நீங்கும். திருமணம் கைகூடும்.

வடகிழக்கு திசையை நோக்கி தீபம் ஏற்ற குடும்பத்தலைவர் வாழ்வில் உண்மையான கொடையாளியாக மாறுவதும், பிள்ளைகளும் அறியாமல் தானம் செய்வார்கள்.

திருக்கார்த்திகை நன்நாளில் தீப வழிபாடு செய்வதால் மனம், உடல் ஆரோக்கியத்தின் அடிப்படை என்று புராணங்கள் சொல்கின்றன. தீபத்தை வீட்டின் பூஜை அறை, சமையல் அறை, துளசிமாடம், முன்வாசல் போன்ற இடங்களிலும், கோவில்களில் தொழில் நிறுவனங்கள், கல்விக்கூடங்கள் என்று எல்லா இடங்களிலும் ஏற்றி வழிபடுவது அவசியம். எல்லா செயல்களிலும் தீபம் ஏற்றப்பட்ட பிறகே செயல்கள் ஆரம்பிக்கும் வழக்கம் இன்றும் நிலவுகிறது.

எந்தெந்த நாட்களில் விளக்கை சுத்தம் செய்யலாம்

வீட்டில் விளக்கை சுத்தம் செய்வது எந்தெந்த நாட்களில் செய்ய வேண்டும் என்பதை பெண்கள் கட்டாயம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

திங்கள் முதல் புதன்கிழமை வரை குபேர தன தாட்சாயணியும், குரு குரு தன தாட்சாயணி குடி கொண்டிருப்பதால் இந்த மூன்று நாட்கள் விளக்கை சுத்தம் செய்யக்கூடாது. அப்படி மறந்து சுத்தம் செய்வதால் இந்த சக்திகள் விலகி விடுகின்றன.

வெள்ளிக்கிழமை அன்றும் சுத்தம் செய்ய குபேரன் சங்கநிதி யட்சனி விலகி விடும். எனவே வியாழன், ஞாயிறு, சனி போன்ற கிழமைகளில் சுத்தம் செய்வது உத்தமம்.

வியாழனன்று சுத்தம் செய்ய குரு கடாட்சம் கிடைக்கும். சனிக்கிழமை சுத்தம் செய்ய வாகன விபத்துக்களில் இருந்து விடுபடலாம். ஞாயிற்றுக் கிழமைகளில் விளக்கை சுத்தம் செய்வதால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அகழுகிறது. எனவே இந்த மூன்று நாட்களில் விளக்கைச் சுத்தம் செய்து தீபம் ஏற்றி வழிபடுங்கள். வாழ்வில் முன்னேற்றத்தை பெறுங்கள்.

மேலும் படிக்க : வியாழக்கிழமை என்ன செய்தால் செல்வம் அதிகரிக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *