தஞ்சை மாமன்னர் சதயவிழா கொண்டாட்டம்!..
தஞ்சையின் மாமன்னர் ராஜராஜ சோழன் சதய விழா கொண்டாட்டம் சிறப்பாக நடைபெறுகின்றது. தஞ்சையில் ராஜராஜன் சோழரின் 1035 சதய விழா கொண்டாட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. தஞ்சை பெரிய கோவில் கட்டிய சோழ மன்னன் ராஜராஜ சோழன் பதவி ஏற்பு விழா ஐப்பசி மாதம் சதய நாளன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.
- தஞ்சை மாமன்னர் சதயவிழா கொண்டாட்டம் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
- ஐப்பசி மாசம் சதயநாள் விழா கொண்டாடப்படுகின்றது.
- ராஜ ராஜ சோழர் கட்டிய தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் வரலாற்று சிறப்பு மிக்கது. கட்டிடக்கல்லைக்கு உலகப்புகழ் பெற்றது.
சதயவிழா கொண்டாட்டத்தில் விதிமுறைகள்
கொரோனா அச்சம் காரணமாக இந்த விழா கொண்டாட்டத்தில் மக்கள் பங்கேற்க கெடுபிடிகள் அரசு விதித்துள்ளது. அதன்படி 6 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கோவிலின் வளாகத்திற்குள் விருந்துதான் வழிபாடு நடத்த வேண்டும் முக கவசம் அணிந்து கொள்வது அவசியம் ஆகும்.
சுகாதாரம்
மேலும் கிருமி நாசினி கொண்ட கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்ள வேண்டும் மேலும் இந்தக் கொண்டாட்டங்கள் ஒருநாள் மட்டுமே நடத்த அரசு அனுமதி வழங்கியிருக்கின்றது.
தஞ்சையில் ராஜ ராஜனுக்கு விழா
சதய விழாவில் திருமஞ்சன வீதி உலா ராஜராஜ சிலைக்கு மரியாதை 48 அபிஷேகங்கள் சுவாமி வீதி உலா ஆகியவை சிறப்பாக நடைபெறும். இந்த விழா கொண்டாட்டத்தில் பெரும்பாலானோர் தலைவர்கள் பலர் பங்கேற்பார்கள் விழாவானது பாதுகாப்புடன் தஞ்சை மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.
சோழர்கால கட்டிடக்கலை
ராஜராஜ சோழன் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் ஆயிரம் ஆண்டு காலம் பழமை வாய்ந்தது. மக்களால் என்றும் மதித்துப் போற்றப்படுகின்றது. உலக கட்டிடக்கலை வியந்து பார்க்கிறது சிறப்புமிக்க அவருடைய கடல்கடந்த படையெடுப்புக்கள் வரலாற்று அறிஞர்களால் வியப்புடன் இன்றும் பேசப்படுகின்றன.
அந்த மாபெரும் மன்னனுக்கு சதய விழா இன்று வணங்குவோம் மாபெரும் மன்னனை ஆசை பெற்றுக்கொள்வோம் ராஜராஜன் பெருமை பறை சாற்றுவோம்