கடற்கரை, அருவிகளுக்கு செல்ல தமிழக அரசு அனுமதி
குற்றால அருவியில் குளிக்க இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளன. கொரோனா பொது முடக்கத்திற்கு பிறகு பல மாதங்களாக மூடப்பட்டுள்ள குற்றால அருவி பயணிகள் வருகைக்கு அனுமதி பெற்றுள்ளது.
- குற்றால அருவியில் குளிக்க அனுமதி.
- கடற்கரை உள்ளிட்ட இடங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி.
- தமிழக அரசு அறிவுறுத்தி உள்ள இந்த விதிமுறைகளை கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சுற்றுலா அனுமதி
குற்றால அருவியில் குளிக்க அனுமதி வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக சுற்றுலா தளங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பு விதிமுறைகளுடன் செயல்படுகின்றன.
விதிமுறை
பொது மக்கள் முக கவசம் அணிந்து வர வேண்டும். பாதுகாப்பிற்காக தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறது. தமிழக அரசு அறிவுறுத்தி உள்ள இந்த விதிமுறைகளை கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கடற்கரை உள்ளிட்ட
தென்காசி மாவட்டம் குற்றாலம், சென்னையில் உள்ள மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. மாமல்லபுரம் கோவில், நீலாங்கரை, திருவான்மியூர் போன்ற கடற்கரை உள்ளிட்ட இடங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி கொடுக்கப் பட்டுள்ளன.