சினிமாசெய்திகள்தமிழகம்

வலிமை படம் அஜித் ரசிகர்களுக்கான அப்டேட்

அடுத்த ஆண்டு மே 1 அஜித் பிறந்த நாளுக்காக ரிலீசாக உள்ளது ‘வலிமை’ படம். அஜித் 50வது பிறந்த நாள் ரிலீஸ் ஆகும் என்ற தகவல் கிடைத்துள்ளன. ‘வலிமை‘ படத்திற்காக லீவு எடுக்காமல் கடுமையாக பணியாற்றி வருகிறது இப்படக்குழு என்பது குறிப்பிடத்தக்கது.

  • அஜித் 50வது பிறந்த நாள் ரிலீஸ் ‘வலிமை’ படம்.
  • காவல்துறை அதிகாரியாக ஈஸ்வரமூர்த்தி பெயரில் அஜித் நடிக்கிறார்.
  • ரசிகர்களுக்காக டபுள் கொண்டாட்டமாக இருக்கும்.

முக்கிய தினங்களுக்கும் விடுமுறை கிடையாது

மேலும் வருகின்ற கிறிஸ்துமஸ், நியூ இயர், புத்தாண்டு, போன்ற முக்கிய தினங்களுக்கும் விடுமுறை கிடையாது என்ற தகவல் வெளியாகியுள்ளன. ‘நேர்கொண்ட பார்வை’ சென்ற ஆண்டு வெளியாகி பாராட்டுக்களைக் குவித்தன. இப்படம் ஸ்ரீதேவியின் கணவர் தயாரிப்பில் வெளியானது.

வலிமை படக்குழு

‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, இப்படங்களை வெற்றி இயக்குனர் H.வினோத் இயக்கியிருந்தார். ‘நேர்கொண்ட பார்வை’ வெற்றியால் மீண்டும் ‘வலிமை’ படத்தில் கூட்டணி இணைந்துள்ளன. இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக ஈஸ்வரமூர்த்தி பெயரில் அஜித் நடிக்கிறார்.

மேலும் படிக்க : அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியராக மாறுக்கிறார் புரோட்டா சூரி

ஷூட்டிங் பகுதி

சென்னை புறநகர் பகுதிகளில் ஷூட்டிங் நடைபெற்றன. மேலும் பைக் ரேசிங் காட்சிகளில் நடித்த அஜித் அதன்பிறகு ஹைதராபாத் சூட்டிங் என பிசியாக இருக்கிறார். சூட்டிங் பிஸி காரணமாக அஜித்துக்கு விபத்து ஏற்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது. அதன் பிறகு மீண்டும் ஹைதராபாத் ஷூட்டிங்கில் இணைந்துள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா

அஜித் ரசிகர்களுக்காக டபுள் கொண்டாட்டமாக இருக்கும் என்று படக்குழு நினைக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளராக இருக்கிறார். அஜித் ரசிகர்களுக்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பை பற்றி தகவல்களை அப்டேட் செய்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா.

மேலும் படிக்க : ராணா நிச்சயதார்த்தத்தில் சைத்தன்யாவுடன் நம்ம சமந்தா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *