செப்டம்பர் 2 முக்கிய தகவல் மற்றும் தகவல்
செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெற்ற, முக்கிய தகவல்கள் மற்றும் செய்திகள் கீழே கொடுக்க பட்டுள்ளது, இது போட்டி தேர்வாளர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும், இதில் தமிழ்நாடு செய்திகள், இன்றைய நாளின் நினைவு கூறுதல், முக்கிய நிகழ்வுகள் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன
தமிழ்நாடு முக்கிய தகவல்
சட்டப்பேரவைசட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், ₹4,800 கோடி மதிப்பில் குடிநீர்த் திட்டங்கள் மற்றும் புதிய கழிவு மேலாண்மை திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. விவசாயிகள் மற்று
விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறல்
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்டம், திருவண்ணாமலை சிப்காட் எதிர்ப்புப் போராட்டம் ஆகியவற்றில் பங்கேற்ற விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவான வழக்குகளைத் திரும்பப் பெற்றது
வாழ்வாதார உரிமைகளுக்காகவும் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது
டிஜிட்டல் உரிமங்கள் திட்டம்
வாகனப் பதிவு சான்றிதழ்கள் (Digital RC) மற்றும் ஓட்டுநர் உரிமங்கள் (Digital DL) செப்டம்பர் 15 முதல் டிஜிட்டல் முறையில் மின்னணு சான்றிதழ்களாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
மேட்டூர் அணை நீர் திறப்பு: காவிரி
காவிரி பாசனப் பகுதிகளின் விவசாயத் தேவைகளுக்காக மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேட்டூர் அணை வரலாற்றில் செப்டம்பர் மாதத்தில் தண்ணீர் திறக்கப்படுவது இது 4-வது முறையாகும்.
மதுபானக் கடை புகார்கள்:
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பாகவும், இதர முறைகேடுகள் குறித்தும் பொதுமக்கள் புகார் அளிக்கப் புதிய வாட்ஸ்அப் எண் மற்றும் சமூக வலைதளப் பக்கங்களை நிர்வாகம் அறிமுகப்படுத்தியது.
சர்வதேச நிகழ்வுகள்
மத்திய கிழக்கு பதற்றம்
அமெரிக்க ராணுவம் ஈரான் தொடர்புடைய நிலைகள் மற்றும் கப்பல்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது
SCO பிரகடனம்
SCO அமைப்பின் 25-வது ஆண்டை முன்னிட்டு, உறுப்பு நாடுகள் காலநிலை மாற்றம், செயற்கை நுண்ணறிவு
செப்டம்பர் 2 தினம்
ஒலிம்பிக் அமைப்பின் தந்தை பியர் தெ குபர்த்தென் (1937), ஆந்திராவின் முன்னாள் முதல்வர் வை. எஸ். ராஜசேகர ரெட்டி (2009) நினைவு தினம் செப்டம்பர் 2
தெலுங்கு நடிகர் மற்றும் அரசியல்வாதி பவன் கல்யாண் (1971), ஹாலிவுட் நடிகர் கேயானு ரீவ்ஸ் (1964) பிறந்த தினம் செப்டம்பர் 2
பிரான்சிடம் இருந்து வியட்நாம் தனது சுதந்திரத்தை பிரகடனம் செய்த நாள் செப்டம்பர் 2

