டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை வெல்ல சிலேட்குச்சியின் கேள்விகளுக்கான விடை மற்றும் விளக்கம்

விடைகள் மற்றும் விளக்கத்தினை முழுமையாக படியுங்கள் கொடுக்கப்பட்டுள்ள  பதிவை தொடர்ந்து ரிவைஸ் செய்து படிக்கவும் வெற்றி பெறவும்.

கேள்வி எண்: 1
1. பொருளாதார மதிப்பு என்பது எந்த காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றது?
விடை: 1. குறைந்தபட்ச ஆதரவுவிலை, கொள்முதல், வழங்குவிலை
விளக்கம்:
பொருளாதார மதிப்பு  மூன்று முக்கிய காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றது1.குறைந்தபட்ச ஆதரவிலை2.கொள்முதல்3.வழங்கு விலை ஆகிய மூன்று காரணிகள் ஆகும்.குறைந்த பட்ச ஆதரவு விலை மூலம் விவசாயிகளுக்கு நேரடியாக பயிர் விளைச்சல்  அதிகமாக இருத்தலும் விலை வீழ்ச்சி அடைந்தாலும் குறைந்தபட்ச ஆதரவு விலை பெற்றுக் கொள்ளும்.


கேள்வி எண்: 2
2. ஆர்ஆர்பியின் குறிக்கோள் என்ன?
விடை: 2. சிறு மற்றும் குறு விவசாய கூலிகளுக்கு விவசாய  வளர்ச்சிக்கு கடன் வழங்குதல்
விளக்கம்: 
ஆர்ஆர்பியின்  சிறு விவசாயிகள் மற்றும் குறு விவசாயிகள் தங்கள் பயிர் விளைச்சலுக்கு தேவையான பணவசதியினை பெற விவசாயிகளுக்கு கடன் வழங்க அரசு கடன் வழங்கு நிறுவன அமைப்புகளை உருவாக்கியது. இவ்வாறு கூட்டுறவு வங்கி, வர்த்தக வங்கி, ஆர்ஆர்பி மண்டல ஊரகவங்கி, நபார்டு வங்கிகள் உருவாக்கப்பட்டன. அவற்றில் ஆர்ஆர்பி எனப்படும் வட்டார வங்கியானது கேட்கில்ழு மற்றும் நரசிம்மன்  குழுவின் பரிந்துரையின்படி ஆர்ஆர்பி வங்கியானது 1975 ஆம் ஆண்டு மொதாபாத்  மற்றும் கொராக்ப்பூர், பீவானி, ஜெய்ப்பூர், மால்டாவில் உருவாக்கப்பட்டது. 


கேள்வி எண் : 3
3. தேசிய ஊரக  விவசாய  முன்னேற்ற நிறுவனத்தின் தலைமை இடம் எது?
விடை: 2. நியூடெல்லி

 விளக்கம்: இது கூட்டுறவு நிறுவனங்களில் ஒன்று 1958இல் விவசாய பொருட்களை கொள்முதல் செய்தல் மற்றும் வழங்குதல், ஏற்றுமதி, இறக்குமதி செய்தல் இதன் பணிகளாகும்.  தேசிய ஊரக விவசாய முன்னேற்ற நிறுவனத்தின் தலைமை இடம் நியூ டெல்லி ஆகும். இது  மேலும் கல்கத்தா, மும்பை சென்னை ஆகிய இடங்களில் நிறுவனம் செயல்படுகின்றது. 


கேள்வி எண்:4 
4. பழங்குடியினரின்  விவசாயப் பொருட்களை சந்தைப்படுத்த ஏற்படுத்தப்பட்ட நிறுவனத்தின் பெயர் என்ன?
விடை:  2. இந்திய தேசிய மலைவாழ் கூட்டுறவு நிறுவனம் 

விளக்கம்: தேசிய மலைவாழ் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் நிறுவனம் 1987இல் தொடங்கப்பட்டது.  விவசாய பொருட்களுக்கு உற்பத்தி, சந்தைப் படுத்துதல், ஹைதிராபாத், உதைப்பூர், ராஞ்சி, போபால், புவனேஷ்வர் போன்ற இடங்களின் இந்த நிறுவனம் அமைக்கப்பட்டது. இதன் தலைமையிடம் மும்பை ஆகும். 


கேள்வி எண்: 5
5. தீன் இலாஹி என்பது யாது?
விடை: 1. தீன் இலாஹி என்பது பொது சமயம் 

விளக்கம்: தீன் இலாஹி என்பது முகலாய பேரரசர் அக்பரால் உருவாக்கப்பட்ட பொது சமயம் ஆகும். 1582இல் உருவாக்கப்பட்டது.  தீன் இலாஹி இஸ்லாம், கிறிஸ்துவம், சமணம் மதங்களை பின்பற்றும் மக்களை ஒன்றினைக்க தீன் இலாஹி  மதம் தோற்றுவிக்கப்பட்டது.

 
கேள்வி எண்: 6 
6. வடஇந்திய வைணவ சமய ஆச்சாரியர்களுள் பெரியவர்  யார்?
விடை: சைதன்யர்

விளக்கம்: மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா, வைணவ பக்தி நெறியைப் பரப்பியவர் ஜாதி வேற்றுமை சமய சடங்குகளை களைத்தவர். கண்ணனின் தீவிர  பக்தர். 


கேள்வி எண்: 7
7. அசிட்டோபாகடர் ஆசிட்டை கொண்டு தயாரிக்கப்படுவது எது?
விடை: 3. வினிகர் தயாரிப்பு

விளக்கம்: ஆசிட்டோபாக்டர் ஆசிட்டை கொண்டு வினிகர் தயாரிக்கப்படுகின்றது. ஆசிட்டோபாக்டர் என்பது நன்மை விளைவிக்கும் பாக்டீரியாக்களுக்குள் ஒன்றாகும். 


கேள்வி எண் 8: 
8 .புரோட்டாசோவா என்பது என்ன?
விடை:  ஒரு செல் உயிரி

விளக்கம்: புரோட்டோசோவா என்பது ஒரு செல் உயிரி ஆகும். இது தனித்து வாழும், நன்னீர், உப்பு நீரில் வாழும் மேலும் இது ஒட்டுண்ணியாகவும் வாழும். நோயை ஒரு  உயிரிடமிருந்து மற்றொரு உயிரிக்கு பரப்பும் ஆற்றல் உடையது. 


கேள்வி எண்: 9 
9. எந்த இடங்களில் நீர்  பாசனத்தின் தேவையுள்ளது? 

விடை: மழை குறைவாக பொழியும் இடங்களில் அல்லது மழை பொய்க்கும் இடங்களில் வேளாண்  தொழில் செய்ய நீர்பாசனம் அவசியம் ஆகும். 

விளக்கம்: மழை குறைவாக பொழியும் இடங்களில் அல்லது மழை பொய்க்கும் இடங்களில் வேளாண் தொழில் செய்ய நீர்பாசனத்தின் தேவையுள்ளது. பயிர் உயிர்வாழ விளைச்சலுக்கு அவசியமானது நீர்பாசனம் ஆகும். 


கேள்வி எண்: 10 
10 வேளாண் தொழிலை நிர்ணயிக்கும் புவியியல்  காரணிகள் யாவை?
விடை: காலநிலை, நிலத்தோற்றம், மண் வளம், நீர் வளம், பணியாளர்கள் 

விளக்கம்: காலநிலையில் முக்கிய காரணியான சூரிய ஒளியின்  பங்கு பயிர் விளைச்சலுக்கு உதவியாக உள்ளது. மழையின் அளவு கொண்டு வேளாண் தொழிலை நிர்ணயிக்கலாம். இந்தியாவில் பல பயிர்களின் விளைச்சலுக்கு நீர்பாசனம் பயன்படுகின்றது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *