டிஎன்பிஎஸ்சிபோட்டித்தேர்வுகள்

போட்டித் தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகளின் குறிப்பு!

நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு குறிப்புகள இங்குக் கொடுத்துள்ளோம். அதனை தேர்வர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். தேர்வுக்குப் படித்துக் கொண்டிருக்கும் பொழுது ஏற்படும் கவனச் சிதறல்கள் குறித்து முன்னரே திட்டமிட்டு செயல்பட வேண்டும். அதனைத் தேர்வர்கள் முறையாக அறிந்து செயல்பட வேண்டும்.

  • நடப்பு நிகழ்வுகளின் தொகுப்புக்களை முறையாக படித்து அதனை தொடர்ந்து ரிவிசன் செய்து கொள்ள வேண்டும்.
  • போட்டித் தேர்வர்களின் வெற்றியை முழுமையாகப் பெற நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பில் கவனமாகப் படிக்க வேண்டும்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னையிலுள்ள கோயம்பேடு பகுதியில் காலால் இயக்கப்படும் லிஃப்ட் எனப்படும் மின்தூக்கி ஒன்றை அறிமுகம் செய்திருக்கின்றது இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் இது கொண்டுவரப்பட்டு இருக்கின்றது.

2020 ஆம் ஆண்டில் இந்துஜா குடும்ப நிறுவனம் ஐக்கிய ராஜ்யத்தின் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாமிடத்தை பிடித்து இருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் ஊரக உரு மாற்றம் திட்டத்தின் கீழ் மக்களுக்கு பயனளிக்கும் ரூபாய் 300 கோடி கோவித் -19 நிதியாக தமிழ்நாடு அரசு ஒதுக்கி இருக்கின்றது.

ஒரு சூரியன் ஒரு உலகம் கட்டமைப்பு திட்டத்தை வெளியிட இந்திய அரசு மற்ற நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

சூரிய வளங்களை மேற்காசியா மற்றும் தென் கிழக்கு ஆசியா உள்ளிட்ட 140 நாடுகளில் பகிர்ந்து கொள்ள உலகளாவிய ஒருமித்த கருத்தை உருவாக்க ஒரு சூரியன் ஒரு உலகம் கட்டமைப்பு திட்டமிடப்பட்டது.

மின் வினியோக நிறுவனங்களின் மின் தேவைகளை அவர்களாகவே திட்டமிட மின்சார சந்தை திட்டத்தை இந்திய எரிசக்தி பரிமாற்றம் அறிமுகப்படுத்துகின்றது.

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு அல்ட்ரா ஸ்வச் அதாவது அதீத சுத்தம் என்ற பெயரில் கிருமிநாசினி பிரிவை உருவாக்கி இருக்கின்றது இந்த திட்டத்தை மானது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

அதிக செயல்திறன் கொண்ட மெக்னீசியம் உலோகக்கலவை ஒன்றை இந்திய தொழில்நுட்பம் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் தமிழ்நாட்டில் உருவாக்கியிருக்கின்றனர் எஃகு, அலுமினியதிற்கு பதிலாக வாகனங்களில் பயன்படுத்தலாம்.

மிஷன் சக்தி என்ற திட்டத்தை அக்டோபர் 17ஆம் தேதி உத்தரபிரதேச அரசு தொடங்கியிருக்கின்றது பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் அவர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க விழிப்புணர்வுடன் இருக்கவும் உருவாக்கப்பட்டிருக்கின்றது மிஷன் சக்தி இரண்டு பகுதியைக் கொண்டது ஒன்று மிஷன் சக்தி மற்றொன்று ஆபரேஷன் சக்தி எனப்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *