பாகுபலி கட்டப்பாவின் பிறந்தநாள்
66 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் சத்யராஜுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். வில்லனாக இருந்து சில்மிஷமாக பெண்களை கண்ணுனு கூப்பிடுபவர் கதாநாயகனாக வில்லனையும் கண்ணு என்று தான் கூப்பிடுவார். ஆனால் இரண்டு கண்ணுக்கும் வெவ்வேறு பாணியிருக்கும். என்ன நான் சொல்றது சரிதானே!
சத்யராஜ்
3 அக்டோபர் 1954 பிறந்திருக்கிறார் ரங்கராஜ் சுப்பையா. கோயம்புத்தூரில் படித்து வளர்ந்தவர் தன் தாயை எதிர்த்து திரையுலகில் பயணத்தை தொடங்க 1976ல் சென்னைக்கு பயணத்தை மேற்கொண்டார். திரை உலகத்திற்கு தன் பெயரை சத்யராஜாக மாற்றிக் கொண்டார்.
திரைப் பயணம்
வில்லனுக்கு அடியாளாக பயணத்தைத் தொடங்கியவர் திரைக்குப் பின் வேலைகளைத் தொடர்ந்து பின் கதாநாயகனாக அறிமுகமானார். 70, 80, 90, 20 களில் கிட்டத்தட்ட 50 வருட திரைப்பயணம் பிரமாதமான நடிகர்.
மேலும் படிக்க : சக்க போடு போட்டாலே …. தாஸ் படம்
கதாபாத்திரம்
திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க கதாநாயகி விட பிள்ளை ரசிக்கலாம் என தோன்றும் அளவிற்கு பட்டையைக் கிளப்புவார். வெள்ளையாக உயரமாக மீசை வைத்தாலும் வைக்காவிட்டாலும் அழகாக பெண்களின் மனதை கொள்ளை கொள்ளும் விதம் தோற்றத்தை உடைய இவருக்கு கதாநாயகன் கதாபாத்திரம் பொருந்தாமல் போகுமா!
ஜோடி
கதாநாயகனாக சத்யராஜ் நடிக்க பல கதாநாயகிகள் சோடியாக நடித்திருந்தாலும் இவரின் நகைச்சுவை தன்மைக்கு இணைந்து மணிவண்ணனின் ஜோடி பட்டையைக் கிளப்பும். மலபாராக கவுண்டமணியுடன் அடிக்கும் லூட்டி கேரளத்து சேட்டாவிற்கு ஒரு சல்யூட். மணிவண்ணன் கவுண்டமணி விஜயகுமார் இவர்களுடன் சத்யராஜ் ஜோடி பிரமாதமான வசூலடிக்கூடியது.
திரைப்படங்கள்
அரசியல் மற்றும் ஜாதி பற்றிய விழிப்புணர்வு மிக்க படங்கள் பல நடித்து மக்களுக்குள் இருக்கும் குரலை திரையில் கொண்டு வந்தவர். 2007ல் பெரியார் படத்தில் பட்டையைக் கிளப்பினார் சத்யராஜ். 2017ல் பாகுபலி திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரமான கட்டப்பாவாக கர்ஜித்தார்.
தற்போதைய சினிமா
ராஜா ராணி படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கு தந்தையாக இவரின் கதாபாத்திரம் பெரிதாக வரவேற்கப்பட்டது. முன்னணி கதாநாயகனாக பிரபலமான நடிகர் தன் வயதிற்கு தகுந்தாற்போல் துணை கதாபாத்திரங்களில் தேர்ந்தெடுத்து நடிப்பது பாராட்டுக்குரியது.
திரை உலகம்
நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர் தயாரிப்பாளர் எனப் பல பிரபலமாகவும் முன்னாள் அரசியல்வாதியாகவும் திகழ்ந்தவர் சத்யராஜ். தமிழ் மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து திரையுலகிலும் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.