சினிமா

பலே பலே ஒரே மாதத்தில் 3 அப்பா 6 மகன்

அக்டோபர் மாதத்தில் 3 ஆம் தேதி சத்யராஜிற்கும் 6 ஆம் தேதியான இன்று சிபிராஜிற்கு பிறந்தநாள். என்ன சாரோய்! தொடர்ந்து கேக் கட்டிங்கா!

சிபிராஜ்

6 அக்டோபர் 1983ல் சென்னையில் பிறந்து இருக்கிறார் சிபிராஜ். சென்னையில் டான் பாஸ்கோ மற்றும் லயோலா கல்லூரி என பிரபல பள்ளி மற்றும் கல்லூரியில் படிப்பை முடித்துள்ளார்.

அறிமுகம்

2003ல் ஸ்டூடண்ட் ஒன் என்ற தமிழ் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தன்னுடைய பத்தொன்பதாவது வயதில் நடிக்கத் தொடங்கிய இவரின் ஆரம்ப திரையுலக பயணம் சற்று சுமாராகவே இருந்தது.

இடைவேளை

2007 வருடத்திற்கு பின் மூன்று வருட இடைவேளைக்கு பிறகு பிரசன்னாவுடன் நாணயம் படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து வெளிநாட்டிற்கு சென்று நடிப்பு கல்வியை மேற்கொண்டார். லாஸ் ஏஞ்சல்ஸில் நியூ யார்க் பிலிம் அகாடமியில் மூன்று மாத படிப்பை முடித்து சென்னை திரும்பினார்.

தந்தை மகன்

2014ல் நாய்கள் ஜாக்கிரதை படத்தை தொடர்ந்து சத்யராஜ் சிபிராஜ் இணைந்து நடிக்கலானார்கள். சத்யராஜ் சிபிராஜ் கவுண்டமணி இணைந்து நகைச்சுவையில் மக்களை சிரிக்க வைத்தனர்.

மேலும் படிக்க : வந்தாச்சு புது அப்டேட்!!!! தீபாவளிக்கு சிம்பு பட டீசர்…

2020

வரும் காலத்தில் 2020 வருடம் கொரோனாவிற்கு முன் கொரோனாவிற்குப் பின் என்ற நிலைமை வருகையில் சிபிராஜின் ஒரு படம் கொரோனாவிற்கு முன் ரிலீஸானது. வால்டர் படத்தில் வால்டர் போலீஸ் அதிகாரியாக நடிக்க படத்தின் கதைக்களம் விறுவிறுப்பாக நகர்ந்தது.

37வது பிறந்த நாள் வாழ்த்துகளோடு சிபிராஜுக்கு வரும் வருடங்கள் வெற்றிகரமாக அமைய சிலேட்குச்சியின் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *