சினிமா

புத்தம் புது காலை சபாஷ்! செமையான ட்ரெய்லர்

இன்னும் 10 நாட்கள் காத்திருக்க வேண்டுமா! 16 அக்டோபர் 2020 அமேசன் பிரைமில் வெளியாக காத்திருக்கும் புத்தம் புது காலையின் ட்ரெய்லர் வெளியானது. அந்த டிரெய்லரை பார்த்த பிறகு காத்திருக்க முடியாத ரசிகர்கள்!

புத்தம் புது காலை

ஐந்து இயக்குனர்களின் சங்கமமாக வெளியாக இருக்கும் படம். சுகாசினி மணிரத்னம், கௌதம் வாசுதேவ் மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் என ஐந்து பிரபலமான முன்னணி இயக்குனர்கள் கலந்து கொடுத்த கலவையே புத்தம் புது காலை.

ஊரடங்கு

கொரோனாவின் கோரத்தாண்டவம் இன்னும் முடிவடையாத நிலையில். திரை உலகிற்கு இரு மாதங்களுக்கு முன் இடப்பட்ட சிறு தளர்வுகளை பயன்படுத்திக் கொண்டு புத்தம் புது காலை படம் கொரோனாவின் விதிமுறைகளுக்கு உட்பட்டு எடுக்கப்பட்டுள்ளது.

போஸ்டர்

படங்களை இணைத்து செய்யும் கொலாஜ் வடிவில் புத்தம் புது காலையின் போஸ்டர் வெளியானது. திரையுலக இயக்குனர்களின் பிரம்மாண்ட இயக்குனரான மணிரத்னம் இந்த போஸ்டரை வெளியிட்டார்.

ட்ரெய்லர்

அமேசன் பிரைமில் வெளியாக இருக்கும் புத்தம் புது காலையின் ட்ரெய்லர் வெளியானது. அமர்க்களமாக சித்தரிக்கப்பட்டுள்ள 5 குறும்படத்தின் தொகுப்பாக புத்தம் புது காலை வெளியாகிறது.

மேலும் படிக்க : புத்தம் புது காலை பொன்னிற வேளை

ஐந்து கதை

ஊரடங்கு 21 நாட்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது என்ற வரிகளுடன் ஆரம்பிக்கும் இந்த ட்ரெய்லரில் ஐந்து விதமான கதை தளங்கள் கொண்டது. ஒரு குடும்பக் கதை, தாத்தாவும் பேத்தியும் மற்றொரு கதை, இரண்டு காதல் கதை மற்றும் இரண்டு வாலிபரின் கதை. ஊரடங்கில் இவர்களின் வாழ்க்கையில் நடப்பதே புத்தம் புது காலையின் கதைத் தளம்.

சபாஷ்

ஊரடங்கு காலக்கட்டத்தில் வயதான பாட்டியின் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒரு பக்கம், இளம் மற்றும் முதிர்ந்த ஜோடிகளின் கொண்டாட்டம் ஒரு பக்கம், தாத்தாவும் பேத்திக்கும் நடுவில் உள்ள உறவு ஒரு பக்கம் மற்றும் வேலைக்காக ஓடிய வாலிபர்கள் முடக்கப்படுவது மறுபக்கம் என சாதாரண மக்கள் ஊரடங்கில் என்ன செய்திருப்பார்கள் என்பதை திரையில் கொண்டு வந்துள்ள ஐந்து இயக்குனர்களுக்கும் சபாஷ் சொல்லிவிடுவோமா!

அடுத்தது என்ன!

அடுத்ததாக ஜிவி பிரகாஷின் இசை காணொளியும் வரக் காத்திருக்கிறது. பிரமாதமான நடிகர்களும் படக்குழுவினரும் இணைந்து பிரம்மாண்டமான வெளியீட்டை செய்ய காத்திருக்கின்றனர். புத்தம் புது காலை 16 அக்டோபர் 2020 நம் இல்லங்களை தேடி வருகிறது.

மேலும் படிக்க : ஜி வி பிரகாஷ்! நீங்கதான் ரியலு எதுக்கு இந்த ரீலு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *