சினிமா

புத்தம் புது காலை பொன்னிற வேளை

நாட்டுல மொழி பெரிய விஷயமா இருக்கிற இந்த சமயத்துல திரையுலகத்தில தமிழுக்கு முக்கியத்துவம் கிடைக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு.

ஓடிடி

கொரோனா வந்தாலும் வந்தது எல்லாமே ஒரு குழப்பமா தான் போயிட்டு இருக்கு. ஊரடங்கு இடப்பட்ட திரையரங்குகள் திறக்கப்படாமல் படங்கள் அனைத்தும் ஒடிடியில் ரிலீசாகுகிறது. அமேசான் ப்ரைம், நெட்பிளிக்ஸ், ஜீ 5, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் என்ற ஓடிடி தளங்கள் போட்டா போட்டி போட்டுக்கொண்டு படங்களை ரிலீஸ் செய்து கொண்டிருக்கிறது. எதற்கு சந்தா கட்டுவது என்று தெரியாமல் மக்களை திக்குமுக்காட வைக்கிறது.

ஜி5

2 அக்டோபர் 2020 ஓடிடி தளத்திற்கு மிகப்பெரிய நாளாக குறிப்பிடலாம். அமேசான் பிரைம் இல் நிஷப்தம்/சைலன்ஸ் படம் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் வெளியானது. க/பெ ரணசிங்கம் என்னும் தமிழ் படம் ஜி5யில் வெளியானது. பிரம்மாண்டமாக பட்டையைக் கிளப்பும் விதமாக ரசிகர் கூட்டம் அலைமோதும் விதமாக இந்தப் படம் அமைந்திருக்கிறது.

அமேசான் பிரைம்

காமிக்ஸ்தான், டைம் என்ன பாஸ் போன்ற நகைச்சுவை இணையதள தொடர்கள் தமிழ்மொழியில் பிரம்மாண்ட வெளியீட்டை அமேசான் ப்ரைம் சமீபத்தில் செய்தது. இந்த இரு நிகழ்ச்சிகளுக்கும் மே பெரிய அளவில் வரவேற்பு வந்தடைந்தது.

நகைச்சுவைத் தொடர்

காமிக்ஸ்தான் ஸ்டான்டப் காமடியன்ஸ் என்று சொல்லப்படும் மேடை நகைச்சுவையாளர்களின் சங்கமமாக இந்த நிகழ்ச்சி பல மணி நேரங்களுக்கு ரசிகர்களை சிரிக்கும் வண்ணம் பட்டையை கிளப்பியது.

அதனைத் தொடர்ந்து வெளியான டைம் என்ன பாஸ் தொடர் பார்த்திபன் குரலில் மொட்டை ராஜேந்திரன், பரத், பிரியா பவானி சங்கர், ரோபோ ஷங்கர், கருணாகரன், அலெக்ஸ், அசோக் செல்வன் மற்றும் சஞ்சனா சாரதி இணைந்து கலக்கிய கிட்டத்தட்ட நாலு மணி நேரம் தொடர் வயிறு வலிக்க வலிக்க சிரிக்க வைத்தது.

மேலும் படிக்க : சிவ கார்த்திகேயனின் டாக்டர் செல்லமா செல்லமா….

புத்தம் புது காலை

ஐந்து சிறுகதைகளின் தொகுப்பாக அமைய இருக்கிறது புத்தம் புது காலை. ஊரடங்கு காலகட்டத்தில் எடுக்கப்படும் அனைத்து குறும்படங்களும் அவரவர் இல்லத்தில் உள்ளும் இல்லத்தை சுற்றியுள்ள இடத்திலும் மட்டுமே எடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சுகாசினி மணிரத்னம், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ்மேனன், சுதா கொங்கரா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் என ஐந்து முன்னணி இயக்குனர்களின் சங்கமம் புத்தம் புது காலை.

புத்தம் புது காலையை தொடரும் அடுத்த தொடர் அடுத்து வருகிறது.

மேலும் படிக்க : புத்தம் புது காலை சபாஷ்! செமையான ட்ரெய்லர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *