சினிமாசெய்திகள்தமிழகம்

Daniel Balaji death : நடிகர் டேனியல் பாலாஜி மரணத்திற்கு இதுதான் காரணம் ..

பிரபல திரைப்பட நடிகை டேனியல் பாலாஜி நேற்று நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிரபல திரைப்பட நடிகர் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தின் சக்கரவர்த்தி என்று போற்றப்படும் டேனியல் பாலாஜி முதல் முதலில் சித்தி என்னும் நாடகத் தொடரில் நடித்து பிரபலமானார். அதன் பின்பு 2002 ஆம் ஆண்டு திரைத் துறையில் கால் பதித்த டேனியல் பாலாஜி தொடர்ந்து படங்களை நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார். வில்லன் கதாபாத்திரத்தில் இவர் பேசும் வசனங்களுக்காகவே இவரை எப்பொழுதும் ரசிகர்கள் சூழ்ந்து இருப்பர்.

தனது 48 வயதில் 42 படங்களை நடித்து சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்த டேனியல் பாலாஜி 2024,மார்ச் 29 ஆம் தேதி மாரடைப்பால் கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடல் புரசைவாக்கத்தில் உள்ள அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *