கல்விடிஎன்பிஎஸ்சிதமிழகம்போட்டித்தேர்வுகள்யுபிஎஸ்சி

டின்பிஸ்சி யுபிஸ்சி போட்டி தேர்வுக்கான அன்றாட தகவல்கள் -29.10.2026

இந்தியா – இந்தோனேசியா ‘கருட சக்தி 2026’ (Garuda Shakti 2026)

இந்தியா மற்றும் இந்தோனேசிய சிறப்புப் படைகளுக்கு இடையேயான 11-வது கூட்டு இராணுவப் பயிற்சி ‘கருட சக்தி 2026’ இந்தோனேசியாவின் பான்யுவாங்கியி (Banyuwangi) பகுதியில் தொடங்கியது. கருட சக்தி (Garuda Shakti) என்பது இந்தியா மற்றும் இந்தோனேசியா இராணுவங்களின் சிறப்புப் படைகளுக்கு இடையே (Special Forces) நடைபெறும் இருதரப்பு கூட்டுப் பயிற்சியாகும்.

நகர்ப்புற மற்றும் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் பயங்கரவாத எதிர்ப்புச் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல்.

புதிய தாவர இனம் கண்டறிப்பு

அசாம் மாநிலத்தில் தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் Osbeckia assamensis என்ற புதிய வகை பூக்கும் தாவர இனத்தைக் கண்டறிந்துள்ளனர்.

தாவரத்தின் பெயர்: Osbeckia assamensis ​குடும்பம் (Family): மெலஸ்டோமேடேசியே (Melastomataceae) ​கண்டறியப்பட்ட

இடம்: மானஸ் தேசிய பூங்கா (Manas National Park), அசாம்

​ஆராய்ச்சியாளர்கள்: கவுஹாத்தி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பர்னாலி தாஸ் (Barnali Das) மற்றும் நமிதா நாத் (Namita Nath)

இத்தாவரம் இளஞ்சிவப்பு நிறப் பூக்களைக் கொண்டது. அசாமின் செழிப்பான தாவரப் பல்லுயிர் பெருக்கத்தை (Floral Diversity) வெளிப்படுத்தும் விதமாக இதற்குக் மாநிலத்தின் பெயரைக் கொண்டு ‘அசாமென்சிஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

விதிமுறை குறியீடு 2026

உலக நீதித் திட்டத்தின் (World Justice Project) சட்டம் மற்றும் ஒழுங்கு தரவரிசையில் இந்தியா 88-வது இடத்தைப் பிடித்துள்ளது. டென்மார்க் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

சுதேசி AI தொழில்நுட்பத்திற்கான ஒப்பந்தம்

இந்திய ஆயுதப்படைகளுக்கான சுதேசி செயற்கை நுண்ணறிவு (Sovereign AI) திறன்களை உருவாக்க, ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படை தலைமையகம் (HQ IDS) ‘சார்வம் AI’ (Sarvam AI) நிறுவனத்துடன் 5 ஆண்டுகால புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது

இந்திய ஆயுதப்படைகளின் பாதுகாப்புத் தேவைகளுக்காக முழுமையான உள்நாட்டுச் செயற்கை நுண்ணறிவு (Sovereign AI) தீர்வுகளை உருவாக்க, ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படை தலைமையகம் (HQ IDS – Headquarters Integrated Defence Staff) மற்றும் சார்வம் AI (Sarvam AI) நிறுவனம் இடையே 5 ஆண்டுகால வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தாகியுள்ளது.

ரோந்து கப்பல் ‘சிருஷ்டி’ (Srishti) அறிமுகம்

கோவா ஷிப்யார்ட் லிமிடெட் (GSL) இந்திய கடற்படைக்காக உள்நாட்டிலேயே தயாரித்த அடுத்த தலைமுறை ரோந்து கப்பலான (NGOPV) ‘சிருஷ்டி’ (Yard 1283) என்ற கப்பலை கோவாவில் வெற்றிகரமாகத் தொடங்கியது.

இக்கப்பல் முற்றிலும் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு, பெரும்பாலான உதிரிபாகங்கள் உள்நாட்டு தொழில்நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

நவீன ரேடார்கள், கண்காணிப்பு அமைப்புகள், அதிவேக ரோந்துப் படகுகளை ஏவும் வசதி மற்றும் ஹெலிகாப்டர் தளமிங்கும் வசதி ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.

சர்வதேச பராமரிப்பு மற்றும் ஆதரவு தினம்

நாள்: அக்டோபர் 29 ​2026 கருப்பொருள் (Theme): “Building Sustainable Care and Support Systems through Decent Work”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *