டிஎன்பிஎஸ்சிதேசியம்பன்னிரண்டாம் வகுப்புபோட்டித்தேர்வுகள்விழிப்புணர்வு

26 அக்டோபர் 2026 – UPSC மற்றும் TNPSC போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய நடப்பு நிகழ்வுகள்

மிஷன் கர்மயோகி (Mission Karmayogi) தரவரிசை

அரசு ஊழியர்களின் திறன் மேம்பாட்டுக்கான ‘மிஷன் கர்மயோகி’ திட்டத்தை சிறப்பாக செயல்படுத் திய மாநிலங்களின் பட்டியலில் உத்தரப் பிரதேசம் முதலிடமும், ராஜஸ்தான் இரண்டாம் இடமும் பெற்றுள்ளன.​அரசு ஊழியர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சியில் (Capacity Building) முன்னணி வகித்த துறைகள்

Category A

  • உள்துறை (Home Department): முதலிடம் (1 கோடிக்கும் மேற்பட்ட பயிற்சிகளை நிறைவு செய்து சாதனை).
  • தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வித் துறை (Basic & Secondary Education): இரண்டாம் இடம்.

Category B

  • உயர்கல்வித் துறை (Higher Education): முதலிடம்.
  • ​உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை மேம்பாட்டு துறை: இரண்டாம் இடம்.

Category C

  • கைத்தறி மற்றும் ஜவுளித் துறை (Handloom & Textiles): முதலிடம்.
  • ​நிர்வாக சீர்திருத்தத் துறை (Administrative Reforms): இரண்டாம் இடம்.

ஹீலியம் வாயுவிற்கு முக்கிய அங்கீகாரம்

அமெரிக்க ஆற்றல் துறை (US Department of Energy) ஹீலியம் (Helium) வாயுவை முக்கியப் பொருள் (Critical Material) பட்டியலின் கீழ் 20-வது பொருளாகச் சேர்த்துள்ளது.

உலகளவில் ஹீலியத்தின் தேவையும் அதன் விநியோக முறைகளில் உள்ள சிக்கல்களும் அதிகரித்துள்ளதால், இதன் விநியோகத்தை உறுதிசெய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவத் துறையில் MRI ஸ்கேனர்களின் காந்தக் சுருள்களைக் (Superconducting Magnets) குளிர்விக்க திரவ ஹீலியம் அத்தியாவசியம்.

  • வேதியியல் பண்புகள்: ஹீலியம் ஓர் மந்த வாயு (Noble Gas). இதன் குறியீடு He, அணு எண் (Atomic Number) 2. இது நிறமற்ற, மணமற்ற மற்றும் மிகக் குறைந்த கொதிநிலை கொண்ட வாயு.​
  • பூமியில் மூலங்கள்: இயற்கை வாயுப் படுகைகளிலிருந்தே (Natural Gas Deposits) ஹீலியம் பிரித்தெடுக்கப்படுகிறது.

இழப்பு மற்றும் சேத நிதி பெரும் முதல் நாடு நேபாளம்

ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை இழப்பு மற்றும் சேத நிதியுதவியைப் பெறும் முதல் நாடாக நேபாளம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகை: சுமார் 21.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ₹180 கோடி).2026 ஆகஸ்ட் மாதத்தில் நேபாளத்தின் போதே கோஷி (Bhote Koshi) ஆற்றுப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளம் (Flash Floods) மற்றும் பனிப்பாறை ஏரி உடைப்பு காரணமாக ஏற்பட்ட பெரும் சேதத்திற்கு நிவாரணமாக இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

2022-இல் எகிப்தில் நடந்த COP27 பருவநிலை மாநாட்டில் இத்திட்டம் முன்மொழியப்பட்டு, 2023-இல் துபாயில் நடந்த COP28 மாநாட்டில் செயல்பாட்டுக்கு வந்தது.பருவநிலை மாற்றத்தினால் வெள்ளம், புயல், கடல்மட்டம் உயர்வு போன்ற இயற்கைச் சீற்றங்களைச் சந்திக்கும் வளரும் மற்றும் ஏழை நாடுகளின் பொருளாதார இழப்புகளை ஈடுகட்ட நிதியுதவி வழங்குவதாகும்

ஆஸ்கார் க்ளீன் மெடல் (Oskar Klein Medal)

இந்திய இயற்பியலாளர் அசோக் சென் (Ashoke Sen) 2026-ஆம் ஆண்டிற்கான புகழ்பெற்ற ‘ஆஸ்கார் க்ளீன் மெடல்’ விருதைப் பெற்றுள்ளார். இவ்விருதைப் பெறும் முதல் இந்திய இயற்பியலாளர் இவராவார்.

ஆராய்ச்சி & உயிரியல்

பெரு (Peru) நாட்டின் ஆண்டிஸ் மலைப்பகுதியில் 4,800 மீட்டர் உயரத்தில் ‘லியோலேமஸ் ஆர்க்கிபென்சிஸ்’ (Liolaemus archipensis) என்ற புதிய வகை பல்லி இனம் கண்டறியப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *