கேள்வி-பதில்செய்திகள்டிஎன்பிஎஸ்சிதமிழகம்தேசியம்போட்டித்தேர்வுகள்ராணுவம்

அக்டோபர் 1 நடந்த முக்கிய மாநில மற்றும் தேசிய நிகழ்வுகள்

ஆதார் தின நிகழ்வில் 5 புதிய டிஜிட்டல் திட்டங்கள் அறிமுகம்

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) கொல்கத்தாவில் நடைபெற்ற ‘ஆதார் தின நிகழ்வில்’ 5 புதிய டிஜிட்டல் திட்டங்களை அறிமுகப்படுத்தியது.

ரேஷன் கடைகளுக்கான முக அங்கீகார முறை

கைரேகை (Fingerprint) சரியாகப் பதிவாகாத முதியோர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், முக அங்கீகாரம் (Face Auth) மூலம் ரேஷன் பொருட்களவைப் பெறுவதற்கான தொடுதல் இல்லாத (Contactless) புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

SWIK போர்ட்டல் 2.0 (SWIK Portal 2.0)

நல்ஆளுமைக்கான ஆதார் பயன்பாட்டு விதிகள்’ (Aadhaar Authentication for Good Governance Rules) கீழ் அனுமதி கோரும் அரசுசாரா அமைப்புகளின் விண்ணப்பங்களை எளிதாகவும் விரைவாகவும் பரிசீலிக்க இந்த மேம்படுத்தப்பட்ட இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

கட்டமைப்பு

குறைந்த எண்ணிக்கையில் ஆதார் சரிபார்ப்பு தேவைகளைக் கொண்ட சிறிய அரசு மற்றும் அரசுசாரா நிறுவனங்கள், தனியாகப் பெரிய தொழில்நுட்ப உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டிய அவசியமின்றி, ஏற்கனவே உள்ள நிறுவனங்களின் அமைப்பைப் பயன்படுத்தி ஆதார் சேவை வழங்கும் எளிய திட்டம்.

டோக்கன் மேலாண்மை முறைமை

UIDAI-ன் மாநில மற்றும் மண்டல அலுவலகங்களுக்கு நேரடியாகச் செல்லும் பொதுமக்களின் காத்திருப்பு நேரத்தைக் குறைத்து, நேர்த்தியான சேவையை வழங்க புதிய டிஜிட்டல் டோக்கன் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட UIDAI அதிகாரப்பூர்வ இணையதளம்

பாஷினி’ (BHASHINI) தளத்தின் உதவியுடன் 13 மொழிகளில் செயல்படும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ள புதிய இணையதளம்

மாற்றுத்திறனாளிகள் எளிதாகப் பயன்படுத்தும் வசதிகள் (Screen Reader, Font controls) மற்றும் பணி நியமனங்களுக்காக ‘UIDAI Career Portal’ ஆகியவை இதில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.

இந்திய வனவிலங்கு வாரம் (Wildlife Week) தொடக்கம்

அக்டோபர் 1 முதல் 7 வரை இந்தியாவில் வனவிலங்கு பாதுகாப்பு வாரமாக அனுசரிக்கப்படுகிறது.

இந்திய வனவிலங்கு வாரியம் (National Board for Wildlife – NBWL) அமைக்கப்பட்ட பிறகு, 1952-ஆம் ஆண்டு ‘வனவிலங்கு தினம்’ என அனுசரிக்கப்பட்டது.

பின்னர் 1957-ஆம் ஆண்டு முதல் அக்டோபர் முதல் வாரத்தை முழுமையாக வனவிலங்கு வாரம் ஆகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

  • புலிகள் பாதுகாப்புத் திட்டம் (Project Tiger): 1973
  • ​யானைகள் பாதுகாப்புத் திட்டம் (Project Elephant): 1992​
  • பனிச்சிறுத்தை திட்டம் (Project Snow Leopard): 2009

மைக்ரோபிளாஸ்டிக் விழிப்புணர்வு

உணவுப் பொருட்களில் மைக்ரோபிளாஸ்டிக் பயன்பாடு குறித்த விவரங்களை லேபிள்களில் குறிப்பிடக் கோரும் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவுகள் மற்றும் வழிகாட்டுதல்கள்.

மைக்ரோபிளாஸ்டிக் (Microplastics) என்பது 5 மில்லிமீட்டருக்கும் குறைவான அளவிலான மிகச்சிறிய பிளாஸ்டிக் துகள்கள் ஆகும். இவை சுற்றுச்சூழலுக்கும், மனித ஆரோக்கியத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகின்றன.

முதன்மை மைக்ரோபிளாஸ்டிக்

அழகுசாதனப் பொருட்கள் (Microbeads), பேஸ்ட் மற்றும் செயற்கை ஆடைகளின் (Synthetic clothes) நார்கள் போன்றவற்றிலிருந்து நேரடியாக வெளிப்படுபவை.

இரண்டாம் நிலை மைக்ரோபிளாஸ்டிக் (Secondary Microplastics):

பெரிய பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள் மற்றும் குப்பைகள் சூரிய ஒளி மற்றும் வெப்பத்தின் காரணமாகச் சிதைந்து சிறிய துகள்களாக மாறுபவை.

தனிநபர் அளவில் நாம் செய்ய வேண்டியவை

பருத்தி (Cotton) மற்றும் இயற்கை நாரால் ஆன ஆடைகளைப் பயன்படுத்துதல்.​

சூடான உணவுகள் மற்றும் பானங்களை நெகிழி (Plastic) பாத்திரங்கள் அல்லது கவர்களில் அடைப்பதைத் தவிர்த்தல்.​

பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்குப் பதிலாகச் செம்பு அல்லது எஃகு (Steel) பாட்டில்களைப் பயன்படுத்துதல்.​

நெகிழிப் கழிவுகளைச் சரியாக வகைப்படுத்தி மறுசுழற்சிக்கு (Recycling) அனுப்புதல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *