செய்திகள்தமிழகம்தேசியம்ராணுவம்வணிகம்

செப்டம்பர் 5 ஆம் தேதி நிகழ்ந்த தமிழகம் மற்றும் தேசிய முக்கிய நிகழ்வு நிகழ்வு

செப்டம்பர் 5 ஆம் நாளின் நினைவு கூறல்

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், ஆங்கிலேயரின் கடற்படை ஆதிக்கத்திற்கு எதிராகச் சுதேசி நாவாய்ச் சங்கத்தைத் தொடங்கி ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று புகழ்பெற்ற வ. உ. சிதம்பரனார் பிறந்த நாள் (1872).

ஏழை எளிய மக்களுக்கும் தொழுநோயாளிகளுக்கும் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துச் சேவை செய்து, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசா மறைந்த நாள் (செப்டம்பர் 5, 1997).

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், சிறந்த தத்துவஞானியுமான முனைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள். மாணவர்களை நல்வழிப்படுத்தும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பைப் போற்றும் வகையில் நாடு முழுவதும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

K N நேரு இல்லத்தில் லஞ்ச துறையினர் சோதனை

திமுகவை சேர்ந்த மிகவும் பரீச்சயமான அமைச்சர் KN நேரு, இவர் கடந்த திமுக ஆட்சியில் 2021-2026 திமுக ஆட்சியில் அவர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக (Minister for Municipal Administration & Water Supply) பணியாற்றினார்.

தூய்மைப் பணியாளர்களுக்கான வீடுகள் கட்டுதல், சாலைப் பணிகள், NABARD திட்டப் பணிகள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை நியமிப்பது போன்ற துறையின் பல்வேறு ஒப்பந்தங்களில் 7.5% முதல் 10% வரை லஞ்சமாகவும் “கட்சி நிதியாகவும்” பெறப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சுமார் 2,538 காலிப் பணியிடங்களை நிரப்பியதில் ரூ. 888 கோடி அளவுக்கு பணி நியமன முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்கள் எழுந்துள்ளது.

சென்னை, திருச்சி மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மொத்தம் 19 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்றது.

திருச்சி இல்லத்தின் முன் திரண்ட தொண்டர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி போன்ற நிர்வாகிகள் சோதனையை எதிர்த்து முழக்கங்களை எழுப்பினர். இதை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நீதித்துறை ஓய்வு வயது உயர்வு நீதிமன்ற உத்தரவு

மாவட்ட நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62-ஆக உயர்த்துவது தொடர்பான வழக்கில், தமிழ்நாட்டின் சென்னை உயர்நீதிமன்ற மதிப்பீட்டு முறையை (Performance Assessment) பிற மாநிலங்களுக்கும் உதாரணமாகச் சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விளையாட்டுத் துறையை மேம்படுத்த சென்னையை ‘ஒலிம்பிக் சிட்டி’ ஆக்கும் திட்டப் பணிகள் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.

உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாகப் பயன்படுத்துவது மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *