செய்திகள்தமிழகம்

100 நாள் சதம் அடித்த தவெக அரசு -100 நாள் சாதனை மலர் வெளியீடு-அதே நாளில் அனல் பறக்கும் சட்டப்பேரவை

தமிழ்நாட்டின் திரு ஜோசப் விஜய் 14 வது முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார், இன்றுடன் 100 நாட்களை கடந்த நிலையில் இன்று தலைமை செயலகத்தில்,தவெக அரசு ஆட்சியில் 100 நாட்களில் படைத்த சாதனையை விளக்கிடும் வகையில், 100 நாள் சாதனை மலரை வெளியிட்டுள்ளார் முதலமைச்சர் ஜோசப் விஜய்.தவெக அரசின் 100 நாள் ஆட்சி,ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சியே என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் பெருமிதம்

credits -google

1.சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை

2.தாய்மாமன் தங்க மோதிர திட்டம்

3. ரூபாய் 1 லட்சம் கோடி முதலீடு

4. 717 மதுபான கடைகள் மூடல்

5. வெற்றித் திறன் பயிற்சித் திட்டம்

6. தமிழ் வெற்றி கிராமப்புற மறுமலர்ச்சி

7. போதைப் பொருளை ஒடுக்க 65 சிறப்பு அதிரடிப்படை

8. அண்ணன் சீர்9. கரும்பு, நெல்லுக்கு ஊக்கத்தொகை

10. வெற்றி வீடு திட்டம்

11.வெற்றி 150 நாட்கள் உத்தரவாத வேலைவாய்ப்பு

12. ஆடுகள் வளர்ப்புத் திட்டம்

13. 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம்

14. காலை உணவுத்திட்ட விரிவாக்கம்

15. 6000 ஆயிரம் கோடி பயிர்க்கடன் தள்ளுபடி

16. வெற்றி மடிக்கணினி திட்டம்

17. 11ம் வகுப்பு மாணவர்களுக்கு நவீன பிராண்டட் சைக்கிள்

18. அடுக்குமாடி கட்டிடங்களுக்கு சிஎம்டிஏ அளவிலே திட்ட அனுமதி

இவை அனைத்தும் தவெக ஆட்சியில் 100 நாள் சாதனையாக பார்க்க படுகிறது, அதை தொடர்ந்து இந்த 100 நாள் சாதனையை விமர்சித்து பல கட்சி தலைவர்களும் பேசியுள்ளனர்.

இன்று நடந்த சட்டபேரவையில் முக்கிய விவாதங்கள் பேச பட்டுள்ளவை ,ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களின் நேருக்கு நேரான காரசார விவாதம்,சட்டபேரவையில் எழுப்ப படும் மக்களின் பிரச்சனைகள் மற்றும் கொள்கை பற்றிய விவாதம்,சட்ட பேரவையில் பல்வேறு துறை சார்ந்த கேள்விகளுக்கு அமைச்சர்கள் அளிக்கும் பதில்களும் முக்கிய விவாதமாக அமைந்தது

பிரதான எதிர்க்கட்சி சார்பில் காவிரி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கக் கோரி கவன ஈர்ப்புத் தீர்மானம் அளிக்கப்பட்டுள்ளது.முதல் கூட்டத்தொடரில் சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பெரும்பாலான பிரச்சினைகளுக்கு ஒரு சில அமைச்சர்கள் மட்டுமே பதிலளித்தனர்.

எனவே, இந்தக் கூட்டத்தொடரில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் நேரடியாக பதிலளிப்பார்களா?? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.கேள்வி நேரத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் அவர்களின் பதிலை அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *