பித்ரு தோஷம் போக்கும் ஆடி அம்மாவாசை -முன்னோர்களின் ஆசி கோடி புண்ணியம்
அம்மாவாசை நாளில் முன்னோர்களை வழிபடும்போது வரும் துன்பங்கள் எளிதில் விலகும்,ஆனால் அனைத்து அம்மாவாசை தினத்திலும் முன்னோர்கலுக்கு தர்ப்பணம் கொடுப்பது, வழிபடுவது என்பது இக்கால கட்டத்தில் எளிதல்ல, எனினும் முக்கிய மூன்று அம்மாவாசை தினத்தில் நாம் நம் முன்னோர்களை வழிபட்டு பித்ரு தோஷத்தை போக்கலாம்
credits google

ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை. இவற்றில் தமிழ் ஆண்டில் முதலில் வருவது ஆடி அமாவாசை இந்த நாளில் முன்னோர்களுக்கு எப்படி தர்ப்பணம் கொடுக்கலாம், எந்த நேரத்தில் கொடுப்பது,அதன் பலன் என்னவென்று தெளிவாக பார்க்கலாம்.
பித்ருதோஷம் எப்படி உருவாகிறது
பலருக்கும் பித்ரு தோஷத்தின் பிரதபலன் தான் சுபகாரியத் தடைகள், முன்னேற்றம் இன்மை, தொழில் வியாபார விருத்தியின்மை, குடும்பத்தில் அமைதியின்மை ஆகிய சிக்கல்கள் உண்டாக காரணம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

நம் தாய் தந்தையரோ, தாத்தா பாட்டிகளோ இல்லை நாம் பார்த்திராத நமக்காக பல தியாகங்கள் செய்த முன்னோர்களை நினைவில் கொள்ளாமல் இருப்பதாலோ,அவர்களை வேண்டி ஆராதனை செய்யாமல் இருந்தால் முன்னோர்களின் மனம் புண்படும், அப்போது பித்ருதோஷம் உண்டாகும் என்கிறார்கள்.
கிரக தோஷம் உள்ளவர்கள், ராகு, கேது தோஷத்தில் அவதி படுபவர்கள், தாய் தந்தை இல்லாதவர் நிச்சயம் தர்ப்பணம் செய்யும்பொழுது வாழ்வில் நல்ல மாற்றங்கள் காணலாம்.
வழிபாடு செய்யும் முறை
முன்னோர் வழிபாட்டை, ஆடி அமாவாசையன்று, காலையே துவங்கி விட வேண்டும். ஏதாவது ஒரு தீர்த்தங்கரைக்குச் சென்று, தர்ப்பணம் செய்து வர வேண்டும். மதியம் சமையல் முடிந்ததும், மறைந்த முன்னோர் படங்களுக்கு மாலையிட்டு, திருவிளக்கேற்ற வேண்டும். ஒரு இலையில், அவர்கள் வாழ்ந்த காலத்தில் விரும்பி சாப்பிட்ட உணவு வகைகளைப் படைக்க வேண்டும்.
படங்களுக்கு தீபாராதனை செய்த பிறகு, காகத்திற்கு உணவிட வேண்டும். இலையில் படைத்த படையலை வீட்டில் மூத்தவர் சாப்பிட வேண்டும்; அவர் சாப்பிட்டதும் மற்றவர்கள் சாப்பிடலாம். இவ்வாறு செய்வதால், முன்னோர் மகிழ்ந்து, நம்மை ஆசிர்வாதம் செய்வதாக ஐதிகம்
பொதுவாக நீர்நிலைகளில் ஆறு, குளம் போன்றவற்றில் தர்ப்பணம் செய்ய உகந்த இடமாகும், நாளை தர்ப்பணம் செய்வதற்காக அதற்கென்ற ப்ரித்தியேக கோவில்களில் விஷேஷமாக நடைபெறும், முன்னோர்கள் வழிபாட்டிற்காக கோவில்களிலும், ஆறுகளிலும் நிரம்பி இருப்பார்கள்.
காலை 8.30. மணிக்குப் பின் மதியப் பொழுதுக்குள் தர்ப்பணம் செய்துமுடித்துவிட வேண்டும். படையல் போடும் வழக்கம் இருந்தால் உச்சைப்பொழுது 11.30 மணிக்கு மேல் போடலாம்.
வழிபாட்டின் பலன்கள்
இந்த நாளில் நாம் செய்யும் வழிபாடு,எள், எண்ணெய் தானம், மாடுகளுக்கு உணவலித்தல் மற்றும் நற்செயல்கள் ஆகியன அனைத்தும் பன்மடங்கு நன்மைகளைக் கொடுக்கும். தீராத பிரச்னைகளுக்குக்கூட தீர். பித்ருக்களின் ஆசி கிடைக்கும்.அதன்மூலம் வீட்டில் சுபகாரியங்கள் கூடிவரும். ராகு கேது தோஷம் நீங்கும்.
திருமணத் தடைகள் விலகும். ஆரோக்கியக் குறைபாடுகள் படிப்படியாக நீங்கும். பொன்பொருள் சேரும் என்பது நம்பிக்கை. மேலும் விட்டுப்போன குலதெய்வ வழிபாட்டை மீண்டும் தொடங்கவும் இந்த நாள் ஏற்ற நாள்.
