சினிமாசினிமா பாடல்கள்சின்னத்திரை

ரோகினி இன்னும் திருந்தலேயே!-நேரம் பார்த்து முத்துவை பழி தீர்க்கும் ரோஹிணி

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோஹிணி வில்லத்தனம் மீண்டும் எழுகிறது, முத்து மீனா ஆபரேஷன்க்காக ஹாஸ்பிடல் செல்கிறார்கள், அண்ணாமலைக்கு கூட சொல்லாமல் செல்கிறார்கள், இதை பயன்படுத்தி ரோஹிணி விஜயாவிடம் மீனாவின் குறையை பற்றி கூறி கிண்டல் செய்கிறார், இதை விஜயா அண்ணாமலையிடம் சொல்லி முத்து மீது கோவத்தை திருப்பி விடுகிறார்

credits -google

மனைவிக்காக அங்கேப்ராதேசனம் செய்யும் முத்து

முத்து மீனாவின் மீதுள்ள காதலையும், அன்பையும் அற்புதமாக வெளிக்காட்டுகிறார், மீனாவின் ஆபரேஷன் முடிந்து குணமடைய வேண்டும் என்பதே ஒரே குறிக்கோள், அதற்காக கோவிலில் சாமியை வேண்டிக்கிட்டு உருண்டு கோவில் முழுதும் அங்கேப்ராதேசனம் செய்கிறார்.

கோவிலுக்கு சென்ற மீனா முத்துவை பற்றியும்,” இப்படி ஒரு கணவர் கிடைக்க அந்த பொண்ணு கொடுத்து வைத்திருக்க வேண்டும் ” என்று பேசி கொண்டிருப்பதை கேட்கிறார், யாரென்று பார்க்கும்போது அந்த நபர் முத்து

மீனாவின் கண்களுக்கு ஓய்வே இல்லை ஆனந்த கண்ணீர் வழிகிறது, இப்படி ஒரு கணவர் யாருக்கும் கிடைப்பார்?? என்று பெருமை கொள்கிறார்.

முத்து செய்யும் தப்பு

அதை தொடர்ந்து மீனாவும் முத்துவும் ஹாஸ்பிடல் செல்ல தயாராகி விட்டார்கள், மீனாவிற்கு அண்ணாமலை கிட்ட சொல்லி விடலாம் என்று எண்ணம் வருகிறது, குற்ற உணர்ச்சியாக உள்ளது என்கிறார்

ஆனால் முத்து “அப்பாவிடம் சொன்னால் வருத்த படுவார், தாங்க மாட்டார் ” என்று சொல்லி அண்ணாமலையிடம் கூட சொல்லாமல் முக்கியமான வேலை இருக்கிறது என்று சொல்லி விட்டு செல்கின்றனர்

மீனாவிற்கு ஆபத்து

ஹாஸ்பிடலில் ஆபரேஷன்க்காக மீனாவிற்கு தைரியம் சொல்லி முத்து அனுப்பி வைக்கிறார், மீனா ஆபரேஷன் தியேட்டர் உள்ளே போன உடனே பரபரப்பாக டாக்டர் போக, முத்துவிற்கு பதட்டம் உண்டாகிறது

டாக்டரை கேட்கும்போது, மீனாவிற்கு கர்ப்ப பை சரி செய்ய ஆரம்பிக்கும் போது பயத்தால் பானிக் அட்டாக் வந்ததாகவும், அதனால் Bp அதிகமாகி இருக்கிறது, இதனால் ஆபரேஷன் செய்ய நேரமாகும், இந்த சூழ்நிலையில் ஆபரேஷன் செய்தால், வலிப்பு அல்லது பக்கவாதம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என சொல்கிறார்

மீனாவிற்கு எதுவும் ஆக கூடாது, அவளை காப்பாற்றுங்கள் என முத்து டாக்டரிடம் பதட்டமாக கூறிக்கொண்டே இருக்கிறார், சிறிது நேரம் கழித்து மீனா நார்மலாக உள்ளதாகவும் டாக்டர் சொல்லி விட்டார்

credits google

ரோகினியின் வில்லத்தனம் – என் குழந்தை தான் உங்க வீட்டின் ஒரே வாரிசு

அதே ஹாஸ்பிடலில் ரோஹிணி மெடிக்கல் செக்க்கப் காக வருகிறார், முத்து ஆபரேஷன் தியேட்டர் வாசலில் சீதாவுடன் அழுது கொண்டே இருப்பதை பார்க்கிறார்.

உடனே நர்சிடம் என்ன ஆச்சு என்று எல்லாம் தெரிந்த உடனே ரோகினியின் வில்லத்தனம் வெளிவருகிறது, உடனே விஜயாவிற்கு போன் செய்து ” உங்க குடும்பத்தோட முதலும் கடைசி வாரிசை நான் தான் சுமந்துகிட்டு இருக்கேன்,மீனாக்கு குழந்தை பொறக்காது, ஸ்ருதிக்கு குழந்தை பெத்துக்கணும்னு ஆர்வமே இல்லை” என்று சொல்கிறார்

விஜயாவிற்கு ஒண்ணுமே புரியவில்லை, கடைசியில் மீனாவுக்கு இப்போ ஆபரேஷன் நடந்திட்டு இருக்கு, இருந்தாலும் குழந்தை பிறக்குற வாய்ப்பே இல்லைனு சொல்றங்கனு சொல்லிட்டாங்க

விஜயாவிற்கு தெரிஞ்ச குழந்தை பிறக்காது அப்படிங்கிற விசயத்தை இப்போ வீட்டுல இருக்க எல்லாரு கிட்டயும் சொல்லி முத்து மீனா மேல் கோவத்தை தூண்டி விடுகிறார், அண்ணாமலையும் உண்மையை மறைத்ததற்காக முத்து மேல் கோவப்படுகிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *