சினிமாசினிமா பாடல்கள்சின்னத்திரை

மனோஜின் கதி அதோ கதி! குடும்பத்திற்கே தெரியவரும் ரோகிணியின் கர்ப்பம் –

சிறகடிக்க ஆசை சீரியலில் இதோடு ரோகிணியின் கதாபாத்திரம் முடிவடையும் போகிறது என்றெல்லாம் தான் நினைத்து இருப்பீர்கள்,இனிமேல் தான் புதிய ட்விஸ்டே இருக்கிறது, ரோகினியோ மனதை திடபடுத்திக் கொண்டு மனோஜிற்காக கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டு விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து இடலாம் என்று வந்திருக்கிறாள் ஆனால் வந்த இடத்தில் ரோகினி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவரால் உறுதி செய்யப்படுகிறது என்ன நடந்தது விரிவாக பார்க்கலாமா?

Google -Credits

நமக்குள் எல்லாம் முடிந்து விட்டதா?? கேள்வி கேட்கும் ரோகினி

மனசுக்கு ரோகினியை விட்டு பிரிய வேண்டும் என்று ஆசை இல்லை இருந்தாலும் விஜயாவின் தூண்டுதலால் ரோகினியை விட்டு பிரிய நினைக்கிறார் மனோஜ்,பத்தாததற்கு குடும்பத்திற்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் வீடு செய்து கொண்டான், இப்பொழுதும் ரோகிணியை விட்டு பிரிய வேண்டுமா என்று யோசித்துக் கொண்டே இருக்கிறார் மனோஜ்

ரோகிணி மனோஜின் நினைவுகளை எல்லாம் மனதில் ஓட்டி பார்த்துக் கொண்டிருக்கிறார், மனம் வலிக்கிறது,மனோஜ் விவாகரத்து செய்ய ரோகிணியின் மனது ஒத்துக்கொள்ளவே இல்லை இருப்பினும் கிறிஷின்ன் எதிர்காலத்திற்காக இந்த முடிவை எடுத்து இருக்கிறாள், விஜயாவின் வீட்டிற்கு போனால், விஜயா எல்லோரும் முன்னரே என்னை திட்டுவார்!பதிலுக்கு நானும் திட்டுவேன் எனக்கு அங்கு போகவே பயமாக இருக்கிறது,எனக்கு ஒரு உறுதுணையாக நீ இருக்க வேண்டும் என்று வித்யாவை அழைத்துக் கொண்டிருக்கிறார் ரோஹிணி

credits -Google

கொண்டாட்டத்தில் விஜயா

விஜயா இதுவரை இவ்வளவு சந்தோசமாக இருந்து பார்த்ததே இல்லை, இன்று அவ்வளவு சந்தோசம், மனோஜிற்கு பிடித்த தொல்லை போய்விட வேண்டுமென்று பூஜை எல்லாம் செய்துவிட்டு வீபூதியை மனோஜின் நெற்றியில் வைத்து கொண்டிருக்கிறார், ரோஹிணி ஏன் இன்னும் வரவில்லை, அவளை நம்ப முடியாது, அவள் எங்கே இருக்கிறாள் என்று கேளு என்று மனோஜிடம் கூறிக்கொண்டே இருக்கிறாள்

அடுத்து லாயர் கிருஷ்ணா ராம் விவாகரத்து பேப்பருடன் வந்துவிட்டார், இன்னும் ரோஹிணி வரவில்லை, ஏற்கனவே அண்ணாமலை ரோகினியை திட்டக்கூடாது என்று விஜயாவிடம் கூறிவிட்டார், இருந்தாலும் ரோஹிணி வருவதற்கு முன்பே திட்ட ஆரம்பித்துவிட்டார்

ரோஹிணியின் கர்ப்பம்

ரோஹிணி வந்தவுடனே வீட்டை பார்த்து புலம்ப ஆரம்பிக்கிறாள், நான் தேடி கொண்ட வாழ்க்கையும் எனக்கு அமையவில்லை என்று, வித்யாவும், ரோகினியும் வீட்டுக்கு முன் நிற்கின்றனர், விஜயாவிற்கு பார்த்த உடனே ஆத்திரம் தங்கவில்லை

அண்ணாமலை தான் வீட்டிற்குள்ளே அழைத்து உட்கார வைத்திருக்கிறார்,விஜயாவால் அமைதியாக இருக்க முடியவில்லை ” பணம் தான் வேணும்னு சொல்லியிருந்தால் எப்போவோ மூஞ்சியில தூக்கி எருஞ்சுருப்பேன் என கூற எனக்கு பணம் முக்கியமில்லை, மனோஜின் சந்தோசம் தான் முக்கியம் என்று கூறுகிறார் ரோஹிணி

அழுதுகொண்டே கையெழுத்து போடும் சமயத்தில் மயங்கி விழுகிறார், டாக்டர் செக்கப் செய்துவிட்டு மனோஜிடம் ” உங்க மனைவி மாதமாக இருக்கிறார் ” என்று கூறுகிறார், இனி அடுத்து மனோஜ் என்ன செய்ய போகிறார்?? விஜயாவிற்கு பேராதிர்ச்சியாக இருக்கிறது, குடும்பமே ரோகினியின் நிலையை பார்த்து என்ன முடிவு செய்ய போகிறது?? ரோஹிணி மனோஜ் பிரிவார்களா?? நாளைய எபிசோட்டில் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *