ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன், பஞ்சாங்கம் மற்றும் சுவாரஷ்ய தகவல் -17.07.2026

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்

இன்றைய பஞ்சாங்கம் 17.07.2026

பரபாவ வருடம் ஆடி 1, வெள்ளிக்கிழமை, July 17, 2026 பஞ்சாங்கம் –

திதி : 06:28 AM வரை திருதியை பின்னர் 04:42 AM வரை சதுர்த்தி பின்னர் பஞ்சமி

நட்சத்திரம் : மகம் 06:34 PM வரை பிறகு பூரம்

யோகம் : வ்யதீபாதம் 10:45 PM வரை, அதன் பின் வரியான்

கரணம் : கரசை 06:28 AM வரை பிறகு வனசை 05:30 PM வரை பிறகு பத்திரை 04:43 AM வரை பிறகு பவம்

சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்

நல்ல நேரம் காலை : 09.15 மணி முதல் 10.15 வரை

நல்ல நேரம் மாலை: 04.45 மணி முதல் 05.45 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 10.30 முதல் 12.00மணி வரை

எமகண்டம் : காலை 03.00 முதல் 04.30 மணி வரை

குளிகை: காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

இன்றைய ராசிபலன் (17.07.2026)

மேஷம் -போட்டி உருவாகும்

ரிஷபம் – நன்மை உருவாகும்

மிதுனம் -மேன்மை உண்டாகும்

கடகம் -பிரீதி உண்டாகும்

சிம்மம்-ஆனந்த களிப்பு

கன்னி -தொழில் வெற்றி

துலாம்-ஆர்வம் அதிகரிக்கும்

விருச்சிகம்-பரிவு உண்டாகும்

தனுசு – காரிய தடை

மகரம் -அனுக்கூலம் உண்டாகும்

கும்பம் -புகழ் ஓங்கும்

மீனம் -தொழில் உயர்வு

ஆடி வெள்ளி சிறப்புகள்

இன்றைய நாளானது ஆடி 1 மற்றும் முதல் நாளே ஆடி வெள்ளி என்பது விஷேஷமாகும், ஆடி மாதத்தில் வரும் ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய், ஆடி அம்மாவாசை, ஆடி 18 ஆடி பெருக்கு, ஆடி கிருத்திகை, ஆடி பூரம் போன்ற சிறப்பு நாள்கள் இம்மாதத்தின் சிறப்புகள் ஆகும்

ஆடி வெள்ளி மற்றும் ஆடி செவ்வாய்களில் கோவில்களில் கூட்டம் அலைமோதும், அம்மன் வழிபாடு இந்த நாளின் சிறப்பாகும்,இந்த நாளில் கூல் ஊற்றுதல், பொங்கல் வைத்து வழிபடுதல், காணிக்கைகளை நிறைவேற்றுதல், அன்னதானம் போன்றவை நிகழும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *