ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -17.11.2026

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம் 17.10.2026

பரபாவ வருடம் கார்த்திகை 1, செவ்வாய்க்கிழமை, November 17, 2026 பஞ்சாங்கம் –

திதி : 06:05 AM வரை அஷ்டமி பின்னர் நவமி

நட்சத்திரம் : அவிட்டம் 04:34 AM வரை பிறகு சதயம்

யோகம் : வ்ருத்தி 07:53 AM வரை, அதன் பின் துருவம்

கரணம் : பத்திரை 05:17 PM வரை பிறகு பவம் 06:05 AM வரை பிறகு பாலவம்.

சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்

நல்ல நேரம் காலை : 07.45 மணி முதல் 08.45 வரை

நல்ல நேரம் மாலை: 03.15 மணி முதல் 04.15 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 04.30 முதல் 06.00 மணி வரை

எமகண்டம் : காலை 12.00 முதல் 01.00 மணி வரை

குளிகை: காலை 03.00 மணி முதல் 04.30 மணி வரை

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

ராசிபலன் -15.11.2026

மேஷம் -பயணம் உண்டாகும்

ரிஷபம் -நட்பு உண்டாகும்

மிதுனம் -ஆரோக்கியம் தேறும்

கடகம் -தொழில் உயர்வு

சிம்மம் -அமைதி உண்டாகும்

கன்னி -குடும்பத்தில் நலம்

துலாம்-தீரம் உண்டாகும்

விருச்சகம் -பிரீதி உண்டாகும்

தனுசு -பதட்டம் உண்டாகும்

மகரம் -நட்பு மலரும்

கும்பம் -எச்சரிக்கை தேவை

மீனம் -நிம்மதி உண்டாகும்

கார்த்திகை 1

கார்த்திகை மாதத்தின் முதல் நாள் (கார்த்திகை 1) ஆன்மீக ரீதியாக மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகும்.

சபரிமலை மண்டல பூஜை தொடக்கம்:

ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்குச் செல்வதற்காக மாலை அணிந்து விரதம் தொடங்கும் மிக முக்கியமான நாள் இதுவாகும். அன்று முதல் 41 நாட்கள் (மண்டல காலம்) கடுமையான விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு யாத்திரை செல்வார்கள்.

கார்த்திகை மாதம் முழுவதும் ‘தீப மாதம்’ என்பதால், கார்த்திகை 1-ஆம் தேதி முதலே வீடுகளின் வாசலிலும் பூஜை அறையிலும் தினமும் மாலையில் அகல் விளக்கேற்றி வழிபடும் வழக்கம் தொடங்கும்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான கொடியேற்றம் மற்றும் பூர்வாங்க வழிபாடுகள் இந்த மாதத் தொடக்கத்தை ஒட்டியே ஆரம்பமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *