கேள்வி-பதில்டிஎன்பிஎஸ்சிபோட்டித்தேர்வுகள்

டின்பிஸ்சி மற்றும் யுபிஸ்சி தேர்வுகளுக்கான அன்றாடம் தகவல்கள் – 17.11.2026

தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் (TNIPC):

தொழில் திட்டங்களுக்கான அனுமதிகள், உரிமங்கள் மற்றும் தடையின்மைச் சான்றுகளை (NOC) 21 நாள்களுக்குள் வழங்குவதை உறுதி செய்ய ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு வணிக எளிதாக்கல் (திருத்த) சட்டம், 2026-ன் கீழ் அமைக்கப்பட்ட இந்த ஆணையத்தின் முதல் கூட்டம் தலைமைச் செயலர் எம். சாய்குமார் தலைமையில் நடைபெற்றது.

வ.உ. சிதம்பரனார் துறைமுக விரிவாக்கம்

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் (VOC) துறைமுகத்தின் வெளிப்புறத் துறைமுகக் கட்டமைப்பை ₹11,733 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் திட்டத்திற்கான ஏல நடைமுறைகள் தீவிரமடைந்துள்ளன

விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 300 முதல் 400 விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

தேசிய விளையாட்டு வாரியத்தின் (NSB) முதல் தலைவர்

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவேஷ் சதுர்வேதி, தேசிய விளையாட்டு வாரியத்தின் (National Sports Board) முதல் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டம், 2025-ன் கீழ் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, தேசிய விளையாட்டுக் கூட்டமைப்புகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான உச்சபட்ச அதிகாரம் கொண்டதாகும். (உறுப்பினராக புஷ்பேந்திர குமார் கார்க் நியமிக்கப்பட்டுள்ளார்).

கடல்சார் கொடி விதிகளில் திருத்தம்:

: 65 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியக் கப்பல்களுக்கான கடல்சார் கொடி விதிகளை மத்திய அரசு திருத்தியுள்ளது. வணிகக் கப்பல்களுக்கு சிவப்புக் கொடியும் (Red Ensign), அரசுத் துறை சார்ந்த கப்பல்களுக்கு நீலக் கொடியும் (Blue Ensign) கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்பு வணிகக் கப்பல் சட்டம், 1958 (Merchant Shipping Act, 1958)-ன் கீழ் 1960-களில் உருவாக்கப்பட்ட விதிகளே நடைமுறையில் இருந்தன

மத்திய, மாநில அரசுகள் மற்றும் துறைமுக ஆணையங்களுக்குச் சொந்தமான வணிக நோக்கமற்ற (Non-commercial) கப்பல்கள் நீலக் கொடியை (Blue Ensign) ஏற்ற வேண்டும். இதன் மேல் இடது மூலையில் இந்திய தேசியக் கொடியும், வலது பகுதியில் அரசாங்க அடையாளச் சின்னமும் இடம்பெற்றிருக்கும்.

வாயேஜர்-1 (Voyager 1) வரலாற்று மைல்கல்:

நாசாவின் வாயேஜர்-1 விண்கலம், பூமியிலிருந்து ‘ஒரு ஒளி நாள்’ (One Light-Day – சுமார் 25.9 பில்லியன் கி.மீ.) தொலைவை எட்டும் வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தவுள்ளது. இந்தத் தொலைவிலிருந்து பூமிக்கு ரேடியோ சிக்னல்கள் வந்து சேர 24 மணி நேரம் ஆகும்.

பாக்ஸ் சிலிக்கா (Pax Silica) & சான் பிரான்சிஸ்கோ பிரகடனம்

பண்டைய ரோமானிய அமைதி காலத்தைக் குறிக்கும் ‘பாக்ஸ் ரோமானா’ (Pax Romana) என்ற சொல்லிலிருந்து உருவாக்கப்பட்டது. இது சிலிக்கான் (செமிகண்டக்டர்) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பாதுகாப்பான மற்றும் அமைதியான உலகளாவிய தொழில்நுட்ப ஒழுங்கைக் குறிக்கிறது.

செயற்கை நுண்ணறிவு (AI) விநியோகச் சங்கிலி, செமிகண்டக்டர்கள் மற்றும் முக்கியக் கனிமங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அமெரிக்கா தலைமையிலான ‘பாக்ஸ் சிலிக்கா’ கூட்டமைப்பின் கீழ் சான் பிரான்சிஸ்கோ பிரகடனத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *