ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

” வாழ்வு தரும் வைகாசி விசாகத்தின் சிறப்புகள்”மற்றும் வழிபாட்டு முறைகள்

வைகாசி விசாகம் என்பது முருகப்பெருமானிற்கு உகந்த நாளாகும் இந்த நாள் முருகப்பெருமான் அவதரித்த நாளாகும், உலக நன்மைக்காக உருவான முருகப்பெருமானின் இந்த நாளை எப்படி வழிபடுவது அதன் சிறப்புகள் என்னவென்று தெளிவாக பார்க்கலாம்

வைகாசி விசாகம் முருகப்பெருமானின் நாள்

சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய ஆறு பொறிகள், சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாகி, பார்வதியால் ஒருசேர அணைக்கப்பட்டு ஆறுமுகக் கடவுளாக அவதரித்த தினம் இதுவாகும்.

அசுரர்களின் கொடுமைகளிலிருந்து தேவர்களை காக்கவும், உலகில் தீய சக்திகளை அழித்து நன்மைகளை நிலைநாட்டவே முருகப்பெருமான் அவதரித்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன,

இந்த நன்னாளில் முருகனை வழிபடுவதால் திருமணத்தடை, குழந்தை பாக்கியமின்மை போன்ற பிரச்சனைகள் நீங்கி, குடும்பத்தில் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும் என்பது ஆன்மீக நம்பிக்கையாகும்

விசாக நட்சத்திரத்தின் சிறப்பு

முருகப்பெருமான் அவதரித்த நட்சத்திரம் விசாகம் நட்சத்திரம் ஆகும், முருகப்பெருமானுக்கு இந்த நட்சத்திரத்தில் பிறந்ததால் விசாகன் என்ற பெயரும் உண்டு, மேலும் மற்ற நாட்களில் முருகப்பெருமானை வணங்குவதை விட இந்த நட்சத்திரத்தில் வைகாசி விசாகத்தில் முருகப்பெருமானுக்கு வழிபாடு செய்யும் பொழுது அதன் பலன்கள் மற்ற நாட்களை விட அதிகமாகவே கிடைக்கும்

வைகாசி விசாகம் நாள்

ஆண்டு வைகாசி விசாகம் மே 30ம் தேதி சனிக்கிழமை அன்று வருகிறது, இந்த நாளில் முருகனை வேண்டி 48, 21,11 நாட்கள் விரதம் இருக்க முடியாதவர்கள் 6 நாட்கள் விரதம் இருக்கலாம். அதுவும் முடியாதவர்கள் 3 நாட்கள் அல்லது வைகாசி விசாகம் அன்று மட்டும் ஒரு நாள் விரதம் இருக்கலாம். 6 நாட்கள் விரதம் இருப்பவர்கள் மே 25ம் தேதியன்று விரதத்தை துவக்கலாம். 3 நாட்கள் விரதம் இருப்பவர்கள் மே 28ம் தேதியன்று விரதத்தை துவக்கலாம்.

வைகாசி விசாகம் வழிபாட்டு முறை

வைகாசி விசாகம் நாளன்று அதிகாலை இல்லம் சுத்தம் செய்து, நீராடி பூஜையை செய்யலாம்,முருகப் பெருமானின் சிலை அல்லது வேலுக்கு பால், பஞ்சாமிர்தம் கொண்டு அபிஷேகம் செய்து வழிபடலாம்

முருகன் படத்திற்கு சந்தனம் குங்குமம் இட்டு,செவ்வரளி பூவால் அலங்கரித்து,தீபம் ஏற்றி சூடம் காட்டி வழிபட வேண்டும்

கந்தசஷ்டி கவசம், சுப்பிரமணிய புஜங்கம் பாராயணம் செய்யலாம்.படத்திற்கு முன் நைவேத்தியமாக பால், பஞ்சாமிர்தம் படைத்து வழிபடலாம்

வைகாசி விசாகத்தின் சிறப்புகள்

வைகாசி விசாகம் நாளில் மனதார முருகனை வழிபடும்போது மனக்குறைகள், துயரங்கள் அனைத்தும் தீரும்

திருமணத்தடை, குழந்தை பாக்கியமின்மை போன்ற பிரச்சனைகள் நீங்கி, குடும்பத்தில் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும் என்பது ஆன்மீக நம்பிக்கையாகும்

பழனி, திருச்செந்தூர், சுவாமிமலை போன்ற அனைத்து முருகன் கோயில்களிலும் வைகாசி விசாகத்தன்று சிறப்பு அபிஷேகங்களும், தேரோட்டங்களும் கோலாகலமாக நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *