சினிமாசினிமா பாடல்கள்சின்னத்திரை

எக்குத்தப்பாய் மாட்டிக்கொள்ளும் மனோஜ் – மாப்பிள்ளை கோளத்தில் மனோஜ் சந்தேகிக்கும் அண்ணாமலை

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று மனோஜ் ரோகினிக்கு தரவேண்டிய 5 லட்சத்தை வாங்குவதற்காக விஜயாவிற்கு கூட தெரியாமல் திருமணம் செய்ய முன் வந்துவிட்டார், இதற்கு முக்கிய காரணமே மனோஜின் பணக்காரர் ஆக வேண்டும் என்ற பேராசை தான், விஜயா ஏற்கனவே அந்த பொண்ணு வேண்டாம் என்று சொல்லியும் மனோஜின் மன நிலை மாறவில்லை அதற்கு காரணம் சுய புத்தி இல்லாமல் மனோஜ் இருப்பது தான் numeralagist பேச்சை கேட்டு தாலி கட்டுவதற்கும் சென்று விட்டார் இன்று முத்து மீனாவிடம் மாட்ட போகிறார்என்ன நடந்தது பார்க்கலாமா?

credits -google

விஜயாவின் பேச்சை மறுக்கும் மனோஜ்

விஜயா மனோஜிற்கு பணக்கார பெண் மனைவியாக கிடைக்க வேண்டுமென்று, மனோஜை பூஜை செய்வதற்கு அழைத்து கொண்டுருக்கிறாள் ஆனால் மனோஜ் என் நண்பன் திருமணத்திற்கு போய் ஆகவே வேண்டும் என்று பொய் சொல்லிவிட்டு தன்னுடைய திருமணத்திற்கு தயாராகி விட்டான், எவ்வளவு சொல்லியும் விஜயா பேச்சை கேட்கவே இல்லை, திருமணத்திற்கு சென்றே ஆகவேண்டும் என சொல்லிவிட்டார்

கல்யாண கோளத்தில் மனோஜ்

அடுத்த நாள் காலை மனோஜ் திருமணம் தான் என்று தெரியாமல், மீனா முத்து அந்த வீட்டிற்கு பூ அலங்காரம் செய்யவும், ஸ்ருதி ரவியும் கேட்டரிங் வேலை செய்யவும் செல்கிறார்கள், அப்பொழுதே மனோஜ் மாப்பிள்ளை கோளத்தில் ரூமிலிருந்து வெளியே வருகிறார்,

அண்ணாமலையையிடமும் விஜயாவிடம் மனதிற்குள்ளேயே மன்னிப்பு கேட்டு விட்டுவிட்டு, கல்யாணத்திற்கு சென்று வருகிறேன் என கூறி சோகமாக அந்த இடத்தை விட்ட செல்கிறான்

சந்தேகிக்கும் அண்ணாமலை

வீட்டில் இருக்கும் அனைவருக்குமே ஒரு வித சந்தேகம் மனோஜின் உண்மையான முகம் இது இல்லையே என்று அண்ணாமலைக்கும் அதே சந்தேகம் தான், அடுத்து மனோஜ் நேராக கல்யாண மாப்பிளையாக வீட்டிற்கு செல்கிறான், இதில் புதிய திருப்பமாக ரோஹிணி தான் கனகாவிற்கு mackup செய்ய வருகிறாள்

சிக்கி முழிக்கும் மனோஜ்

மனோஜின் நண்பர் சந்தோஷ் தான் முதலில் முத்து மீனாவை பார்க்கிறார், உடனே மனோஜிடம் சொல்ல பயத்தில் மனோஜ் முழித்து கொண்டிருக்கிறார், இனி அடுத்து முத்துவிடம் மனோஜ் சிக்குவாரா?? இல்லை கனகாவை திருமணம் செய்ய போகிறாரா?? நாளை காண்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *