ஆனி மாத வளர்பிறை சஷ்டி சிறப்பு -குமார சஷ்டியில் விரதம் இருந்தால் அகப்பையில் குழந்தை நிச்சயம்
ஒவ்வொரு மாதம் வளர்பிறை தேய்ப்பிறை சஷ்டியில் முருகனுக்கு விரதம் இருந்தால் குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும்,எதிரிகள் கடன் தொல்லைகளில் இருந்து வழிபடலாம், வருடத்தில் 24 சஷ்டி திதி வருகின்றன, குறிப்பாக இரண்டு குமார சஷ்டி திதி உள்ளது, அந்த நாளில் குமார சஷ்டி விரதம் கடைபிடித்தால் நிச்சயம் குழந்தை பேறு கிடைக்கும்
ஆனி மாத குமார சஷ்டியின் சிறப்பு
ஐப்பசி மாதத்தில் வரும் மகா கந்த சஷ்டிக்கு விரதம் இருந்து வழிபட்டால் முருகனின் அருளால் வேண்டிய வரங்கள் அனைத்தும் கிடைக்கும் என்பது போலவே, குமாரசஷ்டிக்கு விரதம் இருந்தால் நிச்சயமாக குழந்தை பிறக்கும் என்பதும் ஐதீகம், குமார சஷ்டி என்ற பெயருக்கு ஏற்ப, இந்த நாளில் முருக பெருமானை வழிபட்டு விரதம் இருப்பது சிறப்பு
குமார சஷ்டி திதியில் வழிபட்டால் குழந்தை பேறு மட்டுமின்றி, நாக தோஷங்கள், சர்பதோஷம் ராகு கேது தோஷம் உள்ளிட்டவை நீங்கும் என்பது ஐதீகம்.
குமார சஷ்டிதிதி நாள்
நாள் : ஜூன் 19, வெள்ளிக்கிழமை இரவு 11.03 தொடக்கம், ஜூன் 20 சனிக்கிழமை முடிவு
,திருமண தடை மற்றும் புத்திர பாக்கியம் தடை போன்றவற்றிற்கு காரணமாக சர்பதோஷம்,ராகு கேது தோஷம் போன்றவை நீங்கும்

குமார சஷ்டி விரதம்
முருகன் கோவில்களில் குமார சஷ்டி அன்று சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் செய்யப்படும்,
அதிகாலையில் நீராடி, தூய ஆடை அணிந்து முருகப்பெருமானை வழிபட வேண்டும்.வீட்டின் பூஜை அறையில் உள்ள முருகனின் படத்திற்கு சந்தனம், குங்குமம் இட்டு, மலர்களால் செவ்வரளி மலரால் அலங்கரிக்க வேண்டும்.பழங்கள், நைவேத்தியங்களை படைத்து தீபாராதனை காட்ட வேண்டும்
இந்த நாள் முழுதும் உணவருந்தாமல் உபவாசம் மேற்கொள்ளழலாம்,அல்லது பால் பழம் மட்டுமே உணவாக எடுத்துக்கொண்டு விரதம் இருக்கலாம்,, இந்த நாளில் கந்த சஷ்டி கவசம்,கந்த குரு கவசம் போன்ற முருகன் பாடல் படிக்கலாம்
மாதம் தோறும் வரும் சஷ்டி திதியை கடைபிடிக்காவிட்டாலும், மாசி மாதம் வரும் மஹா சஷ்டி விரதம் மற்றும் ஆனி மாதத்தில் வரும் குமார சஷ்டி விரதம் கடைபிடிப்பது சிறப்பானதாகும்
முருகன் மூல மந்திரம்
ஓம் சரவணபவ”
சரவணபவாய நமஹ
முருகன் காயத்ரி மந்திரம்
ஓம் தத் புருஷாய வித்மஹே மகாசேநாய தீமஹி தந்நோ ஸ்கந்தப் ப்ரசோதயாத்
முருகன் வேல் மந்திரம்
ஓம் வே லாய நமஹ”
செல்வத்தை ஈர்க்கும் மந்திரம்
ஓம் ஐயும் கிலியும் சரவணபவாய நமஹ

