கேள்வி-பதில்செய்திகள்தமிழகம்போட்டித்தேர்வுகள்

மூத்த வழக்கறிஞர் to உச்ச நீதிமன்ற நீதிபதி – தமிழ்நாட்டில் 2 வது பெண் உச்ச நீதிமன்ற நீதிபதி மோகனா

தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த வழக்கறிஞரான மோகனா இன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார், தமிழ்நாட்டில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக முதலில் இந்து மல்ஹோத்ரா என்ற மூத்த வழக்கறிஞர் பொறுப்பேற்றார், அதைத் தொடர்ந்து இவர் இரண்டாவது பெண் மூத்த வழக்கறிஞர் ஆவார்

வழக்கறிஞர்கள் எப்படி உச்ச நீதிமன்ற நீதிபதி ஆக முடியும்?

அரசமைப்பு பிரிவு 124(3)-இன் படி

குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி இருக்க வேண்டும் ,

குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி இருக்க வேண்டும்

இந்திய குடியரசுத் தலைவரின் கருத்தில் சிறப்புமிக்க சட்ட நிபுணராக இருக்க வேண்டும்

உச்சநீதிமன்ற நீதிபதி வி மோகனாவின் பின்னணி

credits -google

கோவை அரசு சட்டக்கல்லூரியில் 1988-ஆம் ஆண்டு சட்டப் படிப்பை முடித்த இவர் கோவை மாவட்ட நீதிமன்றங்களில் வழக்கறிஞர் பணியை தொடங்கினார்.

நீதிபதி வி மோகனாவின் கணவர் பத்மநாபன் மத்திய அரசுப் பணியில் இருந்ததால் திருமணத்துக்குப் பிறகு டெல்லிக்கு குடிபெயர்ந்திருக்கிறார், மேலும் இந்து மல்ஹோத்ரா கவிஞர்களாக இருந்த பொழுது உடன் பணியாற்றி இருக்கிறார்

1996-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்று அங்கு பணியாற்றத் தொடங்கினார். உச்ச நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாயங்களில் இவர் வாதாடியுள்ளார்.

1988 முதல் 1992 வரை விசாரணை நீதிமன்றங்களில் சிவில் வழக்குகளை நடத்தி வந்துள்ளார்,

அதனைத் தொடர்ந்து சுயாதீனமாகவும் வழக்குகளை நடத்தினார்.சிவில் வழக்குகள் தான் அவரின் நிபுணத்துவம் என்றாலும் கிரிமினல் மற்றும் அரசமைப்பு வழக்குகளிலும் ஆஜராகி வாதாடிய அனுபவம் அவருக்கு உண்டு. தமிழ்நாட்டில் இருந்தும் பல்வேறு வழக்குகளில் வாதாடியுள்ளார்

பார் (Bar) எனப்படும் வழக்கறிஞர்கள் சங்கத்தில் இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்பட்ட இந்தியாவின் இரண்டாவது பெண்மணி மற்றும் ஒட்டுமொத்தமாக 12-வது பெண் நீதிபதி என்ற பெருமையைப் பெறுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *