அதிக வட்டி கிடைக்கும் ஒரே சூப்பர் scheme இது தான் – உடனே பயன்படுத்துங்கள் வாழ்க்கை settle
மத்திய அரசால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் ஒரு பெரிய தொகையை வருமானமாகப் பெறலாம். இந்த திட்டத்தின் முக்கிய அம்சம் ஒரு முறை பணம் டெபாசிட் செய்தாலே போதும்! இது ஒரு தபால் அலுவலகத் திட்டம் என்பதால் உங்கள் அசல் தொகை முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும். அதேபோல, வட்டி 100 சதவீத உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.

போஸ்ட் ஆபீஸ் மாதந்திர திட்டம்
போஸ்ட் ஆபிஸ் மாதந்திர திட்டத்தின் மூலம் ஒரு முறை டெபாசிட் செய்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்த மாதம் தோறும் பெரிய தொகை வட்டியாக கிடைக்கும்,மத்திய அரசு இந்த அருமையான திட்டத்திற்கு 7.4% வட்டி தொகையை தருகிறது
தபால் மாதாந்திர திட்டத்தின் விதிமுறைகள்
- இந்த திட்டத்தின் மூலம் ஒரே ஒரு முறை மட்டுமே பணம் செலுத்த முடியும்
- வயது வரம்பு இல்லை
- 10 வயது பூர்த்தியடைந்த குழந்தைகள் குழந்தை பெயரிலே கணக்கை தொடங்கலாம்
- 10 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் கணக்கை தொடங்கி நிர்வகிக்கலாம்
- இந்த தபால் மாதாந்திர கணக்கானது ஒரு தனி நபரோ அல்லது கூட்டு சேர்ந்து இந்த கணக்கை தொடங்கலாம்
- தபால் மாதாந்திர திட்டத்தின் மூலம் ஒரு நாள் தனி நபருக்கு ஒன்பது லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்
- தபால் மாதாந்திர திட்டத்தின் மூலம் இரண்டு நபர்கள் அல்லது கூட்டு சேர்ந்து கணக்கு வைப்பவர்கள் 15 லட்சம் வரை முதலீடு செய்யலாம்
தபால் மாதாந்திர திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
இந்த மாதாந்திர வருமானத் திட்டம் ஓய்வு பெற்றவர்கள் அல்லது மொத்தத் தொகை வைத்திருப்பவர்கள் மற்றும் ஆபத்து இல்லாத மாதாந்திர வருமானத்தை விரும்புபவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது
ரூ. 15 லட்சத்தை ஒரு கூட்டுக் கணக்கில் டெபாசிட் செய்தால், 7.4 சதவீத ஆண்டு வட்டி ரூ. 111,000 ஆக இருக்கும். இதை 12 மாதங்களுக்குப் பிரித்தால் மாதம் 9,250 ரூபாய் உங்களுக்குக் கிடைக்கும்
5 வருடங்கள் முடிந்தவுடன் உங்கள் அசல் முதலீட்டுத் தொகை உங்களுக்குத் திருப்பித் தரப்படும். விரும்பினால் முதிர்வுக் காலத்திற்குப் பிறகு இந்தத் தொகையை மேலும் 5 ஆண்டுகளுக்கு மீண்டும் முதலீடு செய்யலாம்
அவசர தேவைக்கும் அற்புதமான வழி
தபால் மாதந்திர திட்டம் 5 ஆண்டுகளுக்கானது என்றாலும் அவசரத் தேவைக்காகப் பணம் எடுக்க வேண்டியிருந்தால் சில விதிகள் உள்ளன.
1 வருடத்திற்கு முன்பு பணம் எடுக்க முடியாது. 1 முதல் 3 வருடங்களுக்குள் பணம் எடுத்தால் செலுத்திய அசல் தொகையில் 2 சதவீதம் கழிக்கப்படும்.
மேலும் 3 முதல் 5 வருடங்களுக்குள் பணம் எடுத்தால் 1 சதவீதம் கழிக்கப்படும். இந்த திட்டமானது பாமர மக்களுக்கும் பணம் சம்பாரிக்க வழி காட்டுகிறது,
குறிப்பிட்ட வயதிற்கு பின்பு பிறர் துணையின்றி நிம்மதியாக மாதம் தோறும் கிடைக்கும் வட்டியை பெற்று நிம்மதியாக வாழலாம், இது வயது மூப்பு அடையும் பெரியவர்களுக்கு ஒரு மருத்துவ செலவுக்கோ, குழந்தைகளின் எதிர்காலதிற்கு பெரிதும் பயன்படும் வகையில் அமைந்துள்ளது
.

