செய்திகள்தமிழகம்தேசியம்

முதல்வன் பட பாணியில் காட்டிய அறநிலையத்துறை அமைச்சர் – மிரண்டு போன அதிகாரிகள்

தமிழ்நாட்டில் புதிதாக பதவியேற்றுள்ள தமிழக அரசு அரசியலில் மாற்றத்தை கொண்டு வரும் என்று பெரும் எதிர்பார்ப்பில் மக்கள் இருக்கின்றனர், அதற்கு ஏற்ப நாளுக்கு நாள் கவனத்தை ஈர்த்துக் கொண்டே வருகின்றனர் அந்த வகையில் தவெக அமைச்சர்கள் மற்றும் எம் எல் ஏக்கள், இன்று முதல்வன் பட பாணியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திருச்செந்தூரில் பக்தர்கள் போல் சென்று லஞ்சம் வாங்குபவரை கையும் களவுமாக கண்டுபிடித்து அதிரடியாக சஸ்பண்ட் செய்துள்ளார்

credits -google

சமூக வலைத்தளங்களில் வந்த குற்றச்சாட்டு ஆய்வு மேற்கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்

பொதுமக்களிடமிருந்து சமூக வலைதளங்கள் மூலம் பெறப்பட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. முருகப்பெருமானின் அறுபடை வீடான திருச்செந்தூரில் பொதுமக்களிடம் விரைவு தரிசனம் என்ற பெயரில் ஆயிரம் ரூபாய் வசூலிப்பது தொடர்பான குற்றச்சாட்டினை உறுதி செய்யஆய்வின் போது கோவில் வளாகம், அன்னதானக் கூடம், முடி காணிக்கை செலுத்தும் இடம் மற்றும் தரிசன வரிசைகளை அமைச்சர் பார்வையிட்டார்.

மேலும் பக்தர்களோடு வரிசையில் உட்கார்ந்து அன்னதானம் சாப்பிட்டு அதன் உணவு தரத்தையும் ஆய்வு மேற்கொண்டார், அப்போது ஒரு அர்ச்சகர், அமைச்சர் என்று தெரியாமல் விரைவு தரிசனம் செய்ய தலா ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் என்ற விதம் நான்கு பேருக்கு 4000 ரூபாய் வசூலித்து வந்தார், என்னிடம் கையில் பணம் இல்லை என்று கூறியதும் மொபைல் மூலம் gpay அக்கவுண்டில் மாற்ற சொன்னது , எவ்வளவு சாதாரணமாக லஞ்சத்தை அப்பாவி மக்களிடம் இருந்து பெறுகிறார்கள் என்பதை அமைச்சர் புரிந்து கொண்டு பணியிடை நீக்கம் செய்துள்ளார், அந்த குற்றத்திற்கு துணை நின்ற இரண்டு காவலர்களையும் சஸ்பெண்ட் செய்துள்ளார்

அர்ச்சகருக்கு வழக்கு பதிவு

மேலும் இந்த குற்றத்திற்காக ஐயப்பன் அர்ச்சகருக்கு போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது இதற்கு துணை நின்ற இரு காவலர்களுக்கு மீதும் வழக்கு தொடர்ந்துள்ளது

கடும் எச்சரிக்கை விடுத்த அமைச்சர்

இறைவன் முன்னிலையில் இது போன்ற குற்றங்கள் புரிவதும் தவறு என்றும், பாகுபாடு இன்றி நடந்த கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்,

கோயில்களில் பக்தர்களிடம் முறைகேடாகப் பணம் வசூலிப்பது மற்றும் லஞ்சம் கேட்பது போன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கவை. தவறு செய்யும் ஊழியர்கள் மீது பாகுபாடின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என அமைச்சர் ரமேஷ் திட்டவட்டமாகத் தெரிவித்தார்

இதுபோன்றே பிரசாதத்தின் தரம் மற்றும் தயாரிப்பு தேதியை முறையாக அச்சிட்டு விற்க வேண்டும் என கோயில் நிர்வாகத்திற்கு கண்டிப்பான உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *