நீட் தேர்வு தாள் கசிவு- மோடி அரசால் காகித கசிவுகளை தடுக்க முடியவில்லையா – இளைஞர் காங்கிரஸ் அணி போராட்டம்
இந்தியாவில் மருத்துவம் படிப்பிற்கான நுழைவு தேர்வு கட்டாயமக்கப்பட்டுள்ளது இந்த நீட் தோ்வு வினாத்தாள் கசிவு பிரச்னை தொடா்பாக மத்திய அரசுக்கு எதிராக இந்திய இளைஞா் காங்கிரஸ் தேசியத் தலைநகரில் புதன்கிழமை போராட்டம் நடத்தியது.
இந்தியாவில் முதன் முதலில் நீர் தேர்வு எப்போது தொடங்கியது
நீட் தேர்வானது மே 5, 2013 வது வருடம் இந்திய மருத்துவ கவுன்சிலால் அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் இதனை தேர்விற்கு பல தனியார் கல்லூரிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன, இதனை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வழக்கு தொடரப்பட்டது, இதை எடுத்து 2013, 2014 வது வருடம் நீட் தேர்வு நடத்தப்படவில்லை
மீண்டும் 2016 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் நீட் தேர்வை மறுபரிசீலனை செய்து நீட் தேர்வினை phase 1 மற்றும் phase 2 என்று இரண்டு கட்டங்களாக பிரித்து நீட் தேர்வினை கட்டாயமாக்கப்பட்டது
தமிழகத்தில் 2017 -18 களில் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வாக நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது
credits – Google

நீட் தேர்வின் வினாத்தாள் கசிந்ததால் நீட் தேர்வு ரத்து
தற்போது மே 3 2026 ஆம் ஆண்டு நீட் தேர்வு நடத்தப்பட்டது, இதில் பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவிகள் தேர்வினை எழுதினர்,
ஆனால் நீட் தேர்வு கசிந்தது தேர்வு நடைபெற்ற பின்னர் தெரியவந்ததால், அந்தத் தேர்வை என்டிஏ ரத்து செய்தது. இதைத்தொடர்ந்து வினாத்தாள் கசிவு குறித்த விசாரணையை சிபிஐயிடம் மத்திய அரசு ஒப்படைத்தது
ஏழைப் பின்னணியைச் சோ்ந்த குழந்தைகளின் எதிர்காலம் அழிக்கப்படும் அதே நேரத்தில், செல்வந்தர்களின் குழந்தைகள் தோ்ச்சி பெற்று, இடங்களைப் பெற்று, வேலைகளைப் பெறக்கூடிய ஒரு பெரிய வாய்ப்பாக அமைத்துள்ளது,நீட் தேர்வுக்காக கசிந்ததால்மாணவர்களிடயே பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது
நீட் தேர்விற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே நீட் தேர்வு தாள் கைப்பட எழுதிய பிடிஎஃப் ஆனது இணையதளத்தில் telegram சேனல் மற்றும் வாட்ஸாப் மூலம் கசிந்துள்ளது, இதைத்தொடர்ந்து அழித்த புகாரின் பெயரில் குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடித்துள்ளனர் இதற்கு காரணமாக பாஜக நிர்வாகி ஒருவர் சிக்கியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது
பாஜக அரசு மீது கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தும் மாணவர் காங்கிரஸ் அணி
நீட் வினாத்தாள் கசிவு ஊழலில் மூத்த பாஜக தலைவா்களின் தொடா்பு மற்றும் பயிற்சி நிறுவனங்களை நடத்துபவா்கள் வெளிவந்துள்ளனா். நீட் தோ்வை ரத்து செய்வது பிரச்னைக்கு தீா்வு அல்ல. எல்லாவற்றிற்கும் மேலாக, கடந்த 10 ஆண்டுகளில் 89 வினாத் தாள்கள் கசிந்ததற்கு என்ன காரணம்?
மேலும் பாஜக நிர்வாகி ஒரு வினாத்தாளிர்க்கு 30 லட்சம் பேரம் பேசியுள்ளதை பீஹார் போலீசார் கண்டறிந்து கூறியுள்ளதே இந்த போராட்டத்திற்கு முக்கிய காரணமாக அமைகிறது, உள்நாட்டில் நீட் தேர்வு கசிவுகளை தடுக்க முடியவில்லை ஆனால் இரு நாட்டிற்கு இடையேயான போரினை தடுக்க பாடுபட்டு கொண்டிருக்கிறார் என கேள்வி எழுப்பி உள்ளனர்
மேலும் இந்த போராட்டத்தில் தேசியச் செயலாளரும் தில்லி இணைப் பொறுப்பாளருமான ஹெவரன் கன்சானா, தேசியச் செயலாளா் எஷான் அகமது மற்றும் ஏராளமான இளைஞா் காங்கிரஸ் தொண்டா்கள் கலந்துக்கொண்டனர்

