ஜனநாயகன் படத்திற்கு எப்போது சென்சார்?? எப்போதுதிரைப்படம் வெளியீடு??
நடிகர் மற்றும் தவெக தலைவருமான விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படம் ஜனநாயகன், இந்த திரைப்படம் விஜய் அவர்களின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்களிடயே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் இந்த திரைப்படம் அரசியல் சார்ந்து இருப்பதின் காரணமாக,அதிகப்படியான வன்முறை மற்றும் அரசியல் வசனங்கள் காரணமாக, தணிக்கை குழுவின் திருத்தங்களுக்குப் பிறகும், படம் ரிவைசிங் கமிட்டிக்கு (Revising Committee) அனுப்பப்பட்டு சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது, ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்று அளிக்காமல், வெளியிடுவதற்கு தடை விதித்தது
credits -:google

ஜனநாயகன் முழு திரைப்படம் இணையயத்தில் வைரல்
இந்த திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்க மறு பறுசீலனை செய்து கொண்டிருக்கும்போதே, ஏப்ரல், 3 ஆம் தேதி இணையத்தில் வெளியாகி வைரல் ஆகிவந்தது, இதை தொடர்ந்து கோவை கருமத்தபட்டியில் லோக்கல் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி, சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது, இந்த நிலையில் தமிழ் திரைப்படத் துறையில் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்
ஜனநாயகன் திரைப்படத்தின் உதவி எடிட்டர் உமா சங்கர் தான் காரணம்
தயாரிப்பு நிறுவனம் அளித்த புகாரின் பேரில், அசோக் நகர் போலீஸார் மூவர் வரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ‘ஜனநாயகன்’ பட எடிட்டிங் ஸ்டுடியோவின் உதவி எடிட்டர் உமா சங்கரே கசிவுக்குக் காரணம் என சைபர் க்ரைம் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் உமா சங்கர் தரப்பில்,சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை செய்துள்ளேன். ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானதில் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை,ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானதில் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை. உண்மைக் குற்றவாளிகளைப் பாதுகாக்க போலீஸார் என்னை வழக்கில் சேர்த்துள்ளனர்,” எனக் குறிப்பிட்டார்.
அரசியல் சதி பின்னணியா??
ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்க தாமதம் ஆவதும், இணையத்தில் கசிவுக்கும் அரசியல் புள்ளிகளின் பின்னணி உள்ளதா என்று குழப்பத்திலேயே ரசிகர்களை வைத்திருக்கிறார்கள், இந்த நிலையில் இந்த படத்தை சென்சார் போர்டு ரிவைஸிங் கமிட்டியை சேர்ந்த 2 பேர் இன்று பிற்பகல் மீண்டும் பார்க்கிறார்கள். படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக இன்று மாலை தெரியவரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன
ஜனநாயகன் திரைப்படம் வெளியீடு
தற்போது சென்சார் குழுவுடன் இருந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு, படம் மே 8, 2026-ல் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது இந்த செய்தி விஜய் ரசிகர்களிடயே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இருப்பினும் இந்த திரைப்படம் இணையத்தில் வெளிவந்ததால், அது திரைப்படத்தின் வெற்றியை பாதிக்குமா?? அல்லது திரைப்படத்தின் உழைப்பிற்கு ஊதியம் கொடுக்குமா?? என்பதை பொறுத்திருந்து காணலாம்
j

